தட தட சரிவில் தங்கம் விலை.. வெள்ளியும் செம வீழ்ச்சி.. வாங்கி வைக்கலாமா.. இன்னும் குறையுமா?

இன்று காலை தொடக்கத்திலேயே சற்று சரிவில் தொடங்கிய தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது, தற்போது தொடர்ச்சியாக பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது.

சர்வதேச சந்தை, இந்திய கமாடிட்டி சந்தைகளில் விலை குறைவதால், ஆபரணத் தங்கத்தின் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரி வாருங்கள் பார்க்கலாம்? ஏன் இந்த திடீர் சரிவு? இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்? இங்கு வாங்கி வைக்கலாமா? வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் இரண்டு தினங்களுக்கு பின்பு தங்கம் விலையானது, இன்று காலையிலேயே சற்று சரிவினைக் காணத் தொடங்கிய தங்கம், தற்போது அவுன்ஸூக்கு கிட்டதட்ட 2% குறைந்து, 1878.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. நேற்று 1911.90 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 1907.60 டாலர்களாக தொடங்கியுள்ளது. ஆக இன்று விலை குறைய சற்று வாய்ப்புள்ளதாக கூறியிருந்தோம்.

சர்வதேச சந்தையில் வெள்ளி வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் வெள்ளி வீழ்ச்சி

தங்கம் விலையினை விட, வெள்ளி விலை 4% மேல் சரிந்து, 23. 545 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் இன்று சற்று சரிவினைக் காணலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆக இது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 588 ரூபாய் குறைந்து, 50,373 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலை எப்போதெல்லாம் குறைகிறதோ? அப்போதெல்லாம் வாங்கலாம் என்று கோடக் செக்யூரிட்டீஸ் ஒரு அறிக்கையில் கூறியிருந்த நிலையில், நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க இது நல்ல வாய்ப்பு தான்.

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை குறைந்திருந்த நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் பலத்த வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது கிலோவுக்கு 1654 ரூபாய் குறைந்து, 62,632 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவில் 62,281 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 62,060 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியின் விலை இன்று சற்று குறையவே வாய்ப்புகள் உள்ளதாக மதிப்பிட்டிருந்தோம்.

டாலரின் வலிமை

டாலரின் வலிமை

அமெரிக்கா டாலரின் மதிப்பு சற்றே வலுவடைந்துள்ள நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது செம சரிவில் காணப்படுகிறது. எனினும் நவம்பர் முதல் வாரத்தில் வரவிருக்கும் அமெரிக்க தேர்தல் காரணமாகவும், தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்? ஊக்கத் தொகை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்புகள் காரணமாக தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படும். எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் கூறப்படுகிறது.

சரிவில் என்ன செய்யலாம்.?

சரிவில் என்ன செய்யலாம்.?

தங்கமானது பணவீக்கம், பொருளாதார சரிவு உள்ளிட்ட நோக்கங்களுக்காக சிறந்த ஹெட்ஜிங் ஆப்சனாக பார்க்கப்படுகிறது. இதனால் இது பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது, நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில் உலகெங்கிலும் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க இது நல்ல வாய்ப்பு தான்.

 

தங்கம், வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கம், வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

இன்று காலையில் கொடுத்த சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்ஸ்

தங்கம் -Intraday levels
பைவோட் பாயிண்ட் - 50,926
சப்போர்ட் லெவல்கள் - 50,786, 50,516, 50,108
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 51,148, 51,336, 51,746

வெள்ளி - Intraday levels
பைவோட் பாயிண்ட் - 62,123
சப்போர்ட் லெவல்கள் - 61,667, 61,053, 59,983
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 62,737, 63,193,64,263

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+