பட்டையை கிளப்பி வரும் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திரும் போலிருக்கே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போகிற போக்கினை பார்த்தால் நிபுணர்கள் சொன்னதெல்லாம் பலித்து விடும் போல் இருக்கிறதே. அந்தளவுக்கு கடந்த சில தினங்களாக தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. தங்கம் விலை அதிகரிக்கும், தங்கம் விலை மீண்டும் வரலாற்று உச்சத்தினை தொடும், இப்படி இந்திய நிபுணர்கள் முதல், சர்வதேச ஆய்வாளர்கள் வரை தொடர்ந்து கணித்துக் கொண்டே வருகின்றனர்.

அவர்கள் சொன்னதெல்லாம் விரைவில் பலித்து விடும் போல் இருக்கிறது. ஏனெனில் கடந்த நான்கு சந்தை தினங்களாக அந்தளவுக்கு தங்கம் விலையானது பட்டை கிளப்பிக் கொண்டு ஏற்றம் கண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்றைய விலை நிலவரம் என்ன? தற்போது வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஜிம் ரோஜெர்ஸ் & பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பு

ஜிம் ரோஜெர்ஸ் & பேங்க் ஆஃப் அமெரிக்கா கணிப்பு

அமெரிக்காவின் முதலீட்டு குருவான ஜிம் ரோஜெர்ஸ், தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீண்டும் அதிகரிக்கும். ஏனெனில் மக்கள் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டே தான் இருப்பர். இதன் விளைவாக மீண்டும் அவைகள் விரைவில் புதிய உச்சத்தினை தொடும் என்று கூறியிருந்தார். இதே பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 3000 டாலர்களை எட்டும் என்றும் எதிர்பாப்பதாக முன்னர் கூறீயிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவனம் கணிப்பு

அமெரிக்க நிறுவனம் கணிப்பு

இதே சிட்டி குரூப் மற்றும் நியூயார்க்கினை தளமாகக் கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனமான எலக்ட்ரம் குழுமத்தின் நிறுவனர் தாமஸ் கபிலன், தங்கம் விலையானது 5,000 டாலரினை தொடலாம் என்று நம்புவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். கோப்பர்னிக் குளோபல் முதலீட்டாளர்களின் ஆராய்ச்சி இயக்குனர் அலிசா கோர்கரன், மார்கெட் வாட்சிக்கு அளித்த அறிக்கையில் பொருட்களின் குறுகிய கால ஏற்ற இறக்கம் ஆபத்துக்கு பதிலாக ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறியிருந்தார். கோர்கரன் தங்கமானது இன்னும் ஏற்றம் காண இது ஒரு காரணமாக அமையும். இது டாலரில் அவுன்ஸூக்கு 5000 டாலர் வரை கூட செல்லக்கூடும் என்றும் கணித்திருந்தது.

சுரங்க நிறுவனங்கள் பாதிப்பு

சுரங்க நிறுவனங்கள் பாதிப்பு

நடப்பு ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக சுரங்க நிறுவனங்கள் பெரிதும் பாதிப்பினை கண்டுள்ளன. கடந்த ஆண்டினை விட உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அவை 2011ல் இருந்ததை விட 50 - 60% குறைவான நடவடிக்கையில் உள்ளன. இதனால் தங்கம் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்கவிக்கும் விதமாக தங்கம் இறக்குமதியும் செப்டம்பர் மாத நிலவரப்படி, கிட்டதட்ட 60 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது நடுத்தர காலத்தில் அவுன்ஸூக்கு 3000 டாலர் முதல் 5000 டாலர்கள் வரை செல்லலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சர்வதேச ப்யூச்சர் தங்கம் விலை

சர்வதேச ப்யூச்சர் தங்கம் விலை

ஆக இப்படி ஒவ்வொரு நிறுவனமும், ஆய்வாளர்களும் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர். இதனை நிரூபுக்கும் விதமாக தங்கம் விலையும் கடந்த நான்கு தினங்களாக ஏற்றம் கண்டு வருகின்றது. தொடர்ந்து நான்காவது நாளாக இன்று, தற்போது அவுன்ஸூக்கு 11.35 டாலர்கள் அதிகரித்து, 1963.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

சர்வதேச ப்யூச்சர் வெள்ளி விலை

சர்வதேச ப்யூச்சர் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது தொடர்ச்சியான தங்கத்தினை போலவே, நான்காவது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றது. தற்போது 1.10% ஏற்றம் கண்டு, 25.948 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளிக்கான தேவை தொழில் துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பட்சத்தில், வெள்ளியின் விலையும் உச்சம் தொட்டு வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டு வருகின்றது. தற்போது 10 கிராமுக்கு 224 ரூபாய் அதிகரித்து, 52,385 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த வெள்ளிகிழமையன்று 52,167 ரூபாயாக முடிவடைந்துள்ள நிலையில் இன்று தொடக்கத்தில் 52,270 ரூபாயாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி சந்தையிலும் வெள்ளி விலையானது மூன்றாவது தினமாக இன்றும் ஏற்றத்தில் உள்ளது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 860 ரூபாய் ஏற்றம் கண்டு, 66,195 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 65,335 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 65,900 ரூபாயாக தொடங்கியுள்ளது.

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்


Intraday levels
பைவோட் பாயிண்ட் - 52,109
சப்போர்ட் லெவல்கள் - 51,768, 51,370, 50,631
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 52,507,52,848,53,587

Weekly levels
பைவோட் பாயிண்ட் - 51,743
சப்போர்ட் லெவல்கள் - 51,036, 49, 905, 48,067
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 52,874, 53,581, 55,419

 

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

Intraday levels
பைவோட் பாயிண்ட் - 65,201
சப்போர்ட் லெவல்கள் -64,158, 62,981, 60,761
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 66,378, 67,421, 69,641

Weekly levels
பைவோட் பாயிண்ட் - 64.126
சப்போர்ட் லெவல்கள் -62,008, 58,682, 53,238.33
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 67,452, 69,570,75,014

 

இன்று விலை எப்படி இருக்கும்?

இன்று விலை எப்படி இருக்கும்?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இரண்டுமே நீண்ட கால நோக்கில் முதலீட்டாளர்கள் அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர். ஆக கோடக் செக்யூரிட்டீஸ் சொன்னது போல் தங்கம் விலையானது எப்போதெல்லாம் குறைகிறதோ? அப்போதெல்லாம் வாங்கி வைக்கலாம், நிச்சயம் அது ஒரு நாள் லாபம் கொடுக்கும் என்று கூறியிருந்தது. ஆக நீண்டகால நோக்கில் வாங்கி வைப்பவர்கள் நிச்சயம் தற்போதும் கூட வாங்கி வைக்கலாம்.

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் காரணிகள்

உலகமே மிக பர பரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் அமெரிக்கா தேர்தல் தான். அது தற்போது முடிந்துள்ள நிலையில், அடுத்து அமெரிக்காவின் ஊக்கத் தொகை குறித்தான் அறிவிப்புகள் எப்போது வெளியாகும். இது பெரிய அளவில் இருக்குமா? இது பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்குமா என்று பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலையில் பெரியளவில் தற்போதைக்கு ஏற்படுத்த வாய்ப்பில்லை. எனினும் கடந்த வாரத்தில் நடந்த ஃபெடரல் வங்கிக் கூட்டத்தில், வட்டி விகிதத்தில் தற்போதைக்கு மாற்றமில்லை என்றும் கூறப்பட்டது. ஊக்கத் தொகையும் பொருளாதாரம் மீண்டு வர வேண்டும் எனவும் பவல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

அதோடு பரவி வரும் கொரோனா, பல நாடுகளில் இரண்டாம் கட்ட பரவல் ஆரம்பித்துள்ள நிலையில், மேற்கொண்டு லாக்டவுன் கடுமையாக அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரெக்ஸிட் ஒப்பந்தமும் தங்கத்திற்கு ஆதரவாக செயல்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக விரைவில் நிபுணர்கள் கூறுவதெல்லாம் நடந்து விடும் போல் தான் இருக்கின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices continue to rise in 4th consecutive day

Gold price update.. Gold prices continue to rise in 4th consecutive day
Story first published: Monday, November 9, 2020, 12:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X