பணத்தை சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும், அதனை பல மடங்காக பெருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
பொதுவாக நம்மவர்கள் முதலீடு என்றாலே அதிக முக்கியத்துவம் கொடுப்பது தங்கத்திற்கு தான். முன்பெல்லாம் தங்கத்தில் நகையாக முதலீடு செய்வார்கள். ஆனால் இன்று அப்படியில்லை, கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம், தங்க ஃபண்டுகள், தங்க பத்திரம் என பல வழிகள் உள்ளன.
ஆனால் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாங்கி விற்க கமாடிட்டி சந்தையே மிகச்சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை என்னவாகும்?
அதிலும் தற்போது புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தினை மீண்டும் வாங்கலாமா? கடந்த ஆண்டினை போல மீண்டும் உச்சத்தினை தொடுமா? இது வாங்க சரியான நேரமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த வாரத்தின் இறுதியில் சற்றே ஏற்றம் காணத் தொடங்கியுள்ள தங்கம் விலை, வார இறுதியில் காலை அமர்வில் பலத்த ஏற்றம் கண்ட நிலையில் முடிவில் சற்றே குறைந்து காணப்பட்டது.
தங்கம் விலை அதிகரிக்கலாம்
குறிப்பாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது வெள்ளிக்கிழமையன்று 219 ரூபாய் அதிகரித்து முடிவடைந்தது. எனினும் டிசம்பர் 3 அன்று நடப்பு கான்ட்ராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், வரும் வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் புதிய வகை கொரோனா குறித்த அச்சம் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கலாம் என பல தரப்பு நிபுணர்களும் கணித்துள்ளனர்.
பங்கு சந்தைகள் வீழ்ச்சி
புதிய வகை கொரோனா அச்சத்தின் காரணமாக சர்வதேச அளவிலான முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளில் உள்ள முதலீடுகளை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்தின் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையை ஆதரிக்கும் காரணிகள்
ஏற்கனவே தங்கத்தின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. இது பணவீக்கம் அதிகரிக்கும் நிலையில் சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்க மத்திய வங்கியின் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் சரிவு உள்ளிட்டவையும் தங்கத்திற்கு சாதகமான உள்ளன. ஆக இதுவும் தங்கம் விலையை ஆதரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது.
முக்கிய சப்போர்ட்
தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் 1790 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது முக்கிய சப்போர்ட் விகிதமாக அவுன்ஸூக்கு 1760 டாலர்களை கண்டுள்ளது. ஆக தற்போதைய லெவலில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்ற விலையில், குறுகிய கால நோக்கில் 1880 டாலர்களை தொடலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது.
வாங்க இது சரியான நேரம்
அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸூக்கு 1915 டாலர்களை தொடலாம். இதன் எதிரொலி இந்திய சந்தையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்ம் வர்த்தகர்கள், நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளியின் கான்ட்ராக்ட்கள் டிசம்பர் 3, 2021 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால், அடுத்த கான்ட்ராக்டில் வாங்கலாம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!



Click it and Unblock the Notifications