தங்கம் விலையில் தொடரும் ஏற்றம்.. சாமானியர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ள டாலரின் மதிப்புக்கு மத்தியில் மீண்டும் சரிவினைக் காணுமா? அல்லது ஏற்றம் காணுமா? என்று எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

ஏற்கனவே தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 8 வார உச்சத்தில் காணப்பட்டது. தங்கம் விலையானது பிப்ரவரி கான்ட்ராக்டில் 10 கிராமுக்கு 54,561 ரூபாயாக உச்சம் தொட்டு முடிவடைந்தது. இது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 236 ரூபாய் அதிகரித்து முடிவடைந்தது.

இதே டாலரில் அவுன்ஸூக்கு 1797 டாலராகவும் முடிவடைந்தது. இது கடந்த வார முடிவு விலையினை விட 5 டாலர்கள் அதிகரித்து காணப்பட்டது.

ரெசசன் அச்சம்

ரெசசன் அச்சம்

கமாடிட்டி நிபுணர்கள், கொரோனா வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், டாலரின் மதிப்பு உச்சம் தொட்டுள்ளது. எனினும் அமெரிக்க பொருளாதாரம் சரிந்து வரும் நிலையில், ரெசசன் அச்சம் நிலவி வருகின்றது. இது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

வாங்க பரிந்துரை

வாங்க பரிந்துரை

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சைடுவேயாக இருக்கலாம் என்றாலும், இது டாலரில் 1780 - 1820 டாலராக காணப்பட்டது. இது இந்திய சந்தையில் 54000 - 55000 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஷார்ட் ஆர்டர்களை தவிர்க்கலாம் என்றும் கூறுகின்றனர்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவால் தங்கத்தின் தேவையானது குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக தொடர்ந்து, அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

தொடர்ந்து சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் என்பது சரிவுப்பாதையில் இருந்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மூன்றாவது காலாண்டில் 3.2% ஆக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முன்னதாக 2.9% ஆக மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தொடர்ந்து பணவீக்கமானது உச்சத்திலேயே இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பேங்க் ஆப் ஜப்பான், ஐரோப்பிய மத்திய வங்கி, அமெரிக்க ஃபெடரல் வங்கி என அனைத்தும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சர்வதேச வளர்ச்சி என்பது சரிவிலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைடுவேயாக இருக்கலாம்

சைடுவேயாக இருக்கலாம்

இதற்கிடையில் அடுத்த ஆண்டிலும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் நிறுவனம், தங்கம் விலையானது தொடர்ந்து சைடுவேயாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையானது இன்று சற்றே அதிகரித்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்து, 5.076 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் அதிகரித்து, 40,608 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து, 5537 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 55,370 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 74 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 74000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+