தங்கம் விலை வீழ்ச்சி.. அதுவும் உச்சத்திலிருந்து ரூ.2,400.. இப்போது வாங்கலாமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது செப்டம்பர் மாத உச்சத்திலிருந்து கடந்த நான்கு நாட்களாகவே 2,400 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த நாட்களாகவே வீழ்ச்சி கண்டு வருகிறது.

அதிலும் இந்தியாவில் சமீபத்திய விலை வீழ்ச்சி இருந்தபோதிலும், வழக்கமான திருமண சீசன் வாங்குவதை விட குறைவாக இருந்ததால், கடந்த வாரம் இந்தியாவில் உடல் தங்கத்திற்கான தேவையும் மிதமாக உள்ளது.

முதலீட்டாளர்கள் கவனம்

முதலீட்டாளர்கள் கவனம்

அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகபோர் குறித்தான சாதகமான சூழ்நிலையில் இருப்பதையடுத்து, சர்வதேச முதலீட்டாளர்கள் கவனம் பங்கு சந்தையில் திரும்பியுள்ளது. இந்த நிலையில் தங்கத்தில் செய்யும் முதலீடுகள் குறைந்துள்ளது. இதையடுத்து சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1460.40 டாலராக குறைந்துள்ளது. எனினும் அமெரிக்கா கூறிய சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு டிசம்பர் 15 வரி விதிப்பதாய் கூறிய திட்டமும் இன்னும் ரத்து செய்யப்படவில்லை. இந்த நிலையில் இரு தரப்பினரும் இடைக்கால ஒப்பந்தத்தை எட்ட தினமும் பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

முதலீட்டாளர் மாற்று முதலீட்டில் கவனம்

முதலீட்டாளர் மாற்று முதலீட்டில் கவனம்

அரசியல் மற்றும் நிதி நிச்சயமற்ற காலங்களில் தங்கம் பெரும்பாலும் மாற்று முதலீடாகக் காணப்படுகிறது. அமெரிக்காவின் வலுவான வேலைவாய்ப்பு தகவல்கள், பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலையில் என்பதை காட்டிய பின்னரே தங்கம் இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கவனிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

அதிலும் நடப்பு நிதியாண்டில் இதுவரை மூன்று முறை வட்டியை குறைத்த நிலையில், மத்திய வரி விகிதங்கள் சீராக வைத்திருக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது தங்கத்திற்கான முதலீட்டு தேவையை முடக்கியது. இது முதலீட்டாளர்களிடையே எச்சரிக்கையான உணர்வை பிரதிபலிக்கிறது. எனினும் கோல்டுமேன் சாச்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கத்தின் விலை எதிர்காலத்தில் 1,600 டாலர் வரை உயரலாம் என்றும் மதிப்பிட்டுள்ள்ளது.

வழக்கமான தேவை குறைவு தான்

வழக்கமான தேவை குறைவு தான்

வரும் வாரங்களில் தங்கத்திற்கான தேவையும் குறையும் என்பதால், பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லை. எனினும் அமெரிக்கா சீனா ஒப்பந்தம் ஏற்படுமா? இல்லை வரும் டிசம்பர் 15ம் தேதி எதிர்பார்த்ததைப் போலவே வரி அதிகரிப்பு இருக்குமா? என்பதை பொறுத்து தான் முதலீடுகள் அதிகரிக்குமா இல்லையா என்பதே யூகிக்க முடியும்,அதுவரையில் முதலீட்டாளர்கள் பொறுமை காப்பதே நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices continuously down for fourth day

Gold prices continuously down for fourth day amid muted global trend. India’s gold prices are now down Rs.2,400 per 10 gram in September month high.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X