தங்கம் விலை தொடர்ந்து ஐந்து நாட்களாக வீழ்ச்சி.. இன்னும் குறையுமா.. இப்போது வாங்கலாமா..!

என்ன தான் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், ஆசை தீர அதை கொஞ்சமெனும் வாங்கி அணியாவிட்டால், அது நம்மவர்களுக்கு திருப்தியை தராது. அதிலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்கத்தின் மீது அப்படியொரு தீரா மோகம்.

அதுவும் தங்கம் சவரனுக்கு 40,000 ரூபாயை தொட்டாலும் சரி, 20,000 ரூபாயை தொட்டாலும் சரி, நாங்கள் வாங்குவதை கண்டிப்பாக வாங்கியே தீருவோம் என்று வாங்குபவர்கள் இங்கு பலர் உண்டு.

இந்த நிலையில் இந்தியாவில் கமாடிட்டி சந்தையான எம்.சி.எக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது, தொடர்ந்து ஐந்தாவது நாளாக வீழ்ச்சி கண்டு வருகிறது.

தொடர் வீழ்ச்சி

தொடர் வீழ்ச்சி

அதிலும் கடந்த செப்டம்பர் மாத உச்சத்திலிருந்து 2,450 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. என்ன தான் தங்கத்தின் விலை இங்கு வீழ்ச்சி கண்டாலும் அந்தளவுக்கு ஆபரண தங்கத்தின் விலையில் எதிரொலிக்கவில்லை. மேலும் சர்வதேச சந்தையில் நிகழ்ந்து வரும் வீழ்ச்சி காரணமாக, இந்திய சந்தையிலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. எனினும் இந்த தொடர் வீழ்ச்சியானது நிரந்தரமில்லை என்றும் நிபுணர் தரப்பில் கூறப்படுகிறது.

இன்னும் எவ்வளவு குறையலாம்?

இன்னும் எவ்வளவு குறையலாம்?

கடந்த செப்டம்பர் மாதத்திலேயே 40,000 ரூபாய்க்கும் மேல் சென்ற தங்கத்தின் விலையானது, தற்போது 37,590 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த செப்டம்பர் மாத உச்சத்திலிருந்து சுமார் 2450 ரூபாய் வீழ்ச்சியாகும். இதே தொடர் ஐந்து நாட்களாக சரிந்து வரும் நிலையில், ஐந்து நாட்களில் மட்டும் 750 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. தங்கத்தின் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தாலும், இந்த வீழ்ச்சி நீடிக்குமா என்பது சந்தேகம் தான், ஏனெனில் அமெரிக்கா- சீனா இடையேயான ஒப்பந்தம் என்னவாகும். வரவிருக்கும் டிசம்பர் 15 அன்று அமெரிக்கா கூறியிருந்த வரி அதிகரிப்பு தற்போது வரை நீக்கப்படாமலேயே உள்ளது. ஏனெனில் கடைசி நேரத்தில் என்ன நடக்கும் என்ற நிலையிலேயே உள்ளது. இதனால் முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை குறைத்து வருவதோடு, பெரு முதலீடுகளையும் தள்ளிவைத்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் விலை எப்படி?

சர்வதேச சந்தையில் விலை எப்படி?

ஒரு புறம் அமெரிக்கா -சீனா வர்த்தக ஒப்பந்தம் எதிர்பார்ப்பு, டிசம்பர் 15 வரி உயர்வு அமல், வேலைவாய்ப்பு குறித்தான சாதகமான அறிக்கையே தங்கம் விலை வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் தற்போது தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 1467.15 டாலராக வர்த்தகமாகி வருகிறது. ஏனெனில் வரவிருக்கும் கட்டண அதிகரிப்பு கொள்கையினால் சந்தை எப்படி வேண்டுமானாலும் வர்த்தகமாகலாம் என்ற நிலையில் வர்த்தகர்கள் ஒதுங்கியுள்ளது, சந்தைக்கு சாதகமாக உள்ளது.

ரூபாயினாலும் மாற்றம் இருக்கலாம்

ரூபாயினாலும் மாற்றம் இருக்கலாம்

சர்வதேச சந்தையில் வர்த்தக போர் குறித்தான பேச்சுவார்த்தை மீதான சாதகமான நம்பிக்கை, தங்கத்தின் விலையில் அழுத்தம் கொடுக்கும். அதே வேளையில் இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அபான்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் அபிஷேக் பன்சால் தெரிவித்துள்ளார்.

ஃபெடரல் வங்கி கூட்டம்

ஃபெடரல் வங்கி கூட்டம்

அமெரிக்காவின் மத்திய ஃபெடரல் வங்கியின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில், இந்த கூட்டத்தின் மீது வர்த்தகர்கள் பார்வை விழுந்துள்ளது. ஏனெனில் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு ஏதேனும் புதிய அறிவிப்புகள் இருக்கிறதா? வட்டி விகிதம் பற்றிய ஏதேனும் அறிக்கை வருமா என்றும் முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

 இந்தியாவில் தங்கம் விலை 19% அதிகரிப்பு

இந்தியாவில் தங்கம் விலை 19% அதிகரிப்பு

தங்கத்தின் மீதான திருத்தம் இருந்த போதிலும், நடப்பு ஆண்டில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது அமெரிக்கா சீனா வர்த்தக மோதல்கள், சர்வதேச நாடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுத்த நாணயக் கொள்கைகள் என பலவும் வழி வகுத்தன. அதிலும் இந்தியாவில் சர்வதேச சந்தையோடு ஒப்பிடும்போது 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது இந்தியா ரூபாயின் வீழ்ச்சி, இறக்குமதி வரி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அதிகரித்தது என்றும் கூறப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

எப்படி எனினும் 2020ல் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கோல்டுமேன் சாச்சஸ் குரூப் இன்க் தெரிவித்துள்ளது. இது 1,600 டாலர் வரை கூட செல்ல வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இது கடைசியாக கடந்த 2013ல் இந்த விலையை தொட்டது என்றும் கருதப்படுகிறது. மேலும் நடப்பு ஆண்டில் உள்ளதை போலவே அரசியல் பதற்றங்கள், பொருளாதார அபாயங்கள் இன்னும் அதிகரிக்கலாம். இதனால் இது தங்கத்தின் விலையை இப்பிரச்சனைகள் ஆதரிக்க கூடும் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+