தங்கம் விலையானது இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தொடர்ச்சியாக, ஒன்பது நாட்களாக சரிவினைக் கண்டு வருகின்றது.
கடந்த ஏப்ரல் 23-க்கு பிறகு தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வரும் தங்கம் விலை, இன்று வரையில் சரிவில் தான் காணப்படுகிறது.
இது முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் சர்பிரைஸ் கொடுக்கும் வகையில் உள்ள நிலையில், இது சாமானிய மக்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றே கூறலாம்.
என்ன காரணம்?
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இந்திய கமாடிட்டி சந்தையிலும் சரிவினைக் கண்டு வருகின்றது. இதே போல வெள்ளியின் விலையும் சரிவிலேயே காணப்படுகிறது. இதன் எதிரொலியாக ஆபரண தங்கம் விலையும் சரிவினைக் கண்டு வருகிறது. மேலும் இந்தியாவில் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியில், ஆபரண தங்கத்திற்கான தேவையும் சரிவினைக் கண்டு வருகின்றது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், இன்று பெரியளவில் இதுவரை மாற்றம் காணவில்லை. தற்போது கிராமுக்கு 4,410 ரூபாயாகவும், சவரனுக்கு 35,280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்றோடு தொடர்ச்சியாக தங்கம் விலையானது எட்டு நாட்கள் சரிவிலும், இன்று விலையில் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது. இது தங்கம் வாங்க சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
சென்னையில் தூய தங்கத்தின் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 4811 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 38,488 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 48,110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் தொடர்ச்சியாக ஒன்பது நாட்களாக சரிவிலேயே காணப்படுகிறது.
சென்னையில் ஆபரண வெள்ளி விலை
தங்கம் விலையானது மாற்றம் காணாவிட்டாலும், வெள்ளியின் விலையானது இன்று சரிவினைக் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 1.20 ரூபாய் குறைந்து, 72.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 1,200 ரூபாய் குறைந்து, 72,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையானது கடந்த 9 நாட்களில் 7 நாட்கள் சரிவிலும், 2 நாட்கள் ஏற்றத்திலும் காணப்படுகிறது.
இன்னும் குறையலாம்?
தங்கம் விலையானது வரும் வாரத்திலும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், இன்னும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?



Click it and Unblock the Notifications