சாமனியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு.. நான்காவது நாளாக சரியும் தங்கம் விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, தொடர்ச்சியாக இன்றோடு, கடந்த நான்கு தினங்களாகவே சரிவினைக் கண்டு வருகின்றது.

இது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் வகையில் உள்ள நிலையில், இது சாமனிய மக்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றே கூறலாம்.

 கொரோனா அச்சம்.. ஒரு வாரம் தொழிற்சாலையை மூடிய எம்ஜி மோட்டார்ஸ்..! கொரோனா அச்சம்.. ஒரு வாரம் தொழிற்சாலையை மூடிய எம்ஜி மோட்டார்ஸ்..!

வழக்கம் போல சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையில் சரிவினைக் கண்டுள்ளது. வெள்ளியின் விலையும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் தங்கம் விலை எவ்வளவு? வெள்ளியின் விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை என்ன? சாதக மற்றும் பாதகமான காரணங்கள் என்னென்ன? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? இன்று வாங்கலாமா? வேண்டாமா? வாருங்கள் பார்க்கலாம்.

சற்று சரிவில் xauusd

சற்று சரிவில் xauusd

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படுகிறது. கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது, காலை நேரத்தில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், மாலை அமர்வில் மீண்டும் சரிவில் முடிவடைந்துள்ளன. இதற்கிடையில் தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.30 டாலர்கள் அதிகரித்து, 1781.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் முந்தைய அமர்வின் விலையை விட, இன்று காலை தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது. நேற்றைய உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் வார கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்க இது நல்ல இடமே.

சர்வதேச வெள்ளி விலை (Silver)

சர்வதேச வெள்ளி விலை (Silver)

தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது தற்போது 0.12% ஏற்றம் கண்டு, 26.240 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையில் சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 47 ரூபாய் குறைந்து, 47,415 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. அப்படியே வாங்கினாலும், இன்றைய குறைந்தபட்ச விலையானது 47,360 ரூபாய்க்கு கீழாக ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்வது நல்லது. அதோடு நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் தற்போது வாங்கி வைக்கலாம்

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையிலும் இன்று பெரிய மாற்றம் இல்லை. தற்போது கிலோவுக்கு வெள்ளியின் விலையானது 77 ரூபாய் குறைந்து, 68,635 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று குறைந்து தான் தொடங்கியுள்ளது. மேலும் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. இதனால் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் மே காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், ஜூலை காண்டிராக்டில் வாங்கலாம். எனினும் லாபத்தினை பலரும் புராபிட் செய்யலாம் என்பதால், சற்று குறைந்த பிறகு வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், இன்று பெரியளவில் இதுவரை மாற்றம் காணவில்லை. தற்போது கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து 4,463 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து, 35,704 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த ஐந்து அமர்வுகளாக தொடர்ச்சியாக குறைந்து வரும் தங்கம் விலையானது, வாங்க சாமனியர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலை

சென்னையில் தூய தங்கத்தின் விலையும், இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 4869 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, 38,952 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 48,690 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது கடந்த நான்கு நாட்களில் மூன்று நாட்கள் 1900 ரூபாய் குறைந்தும், ஒரு நாள் பெரிய மாற்றமின்றியும் காணப்படுகிறது. இன்று கிராமுக்கு சற்று அதிகரித்து 74 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 74,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியினையும் வாங்க இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்த சப்போர்ட் லெவல்

அடுத்த சப்போர்ட் லெவல்

தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்துள்ள நிலையில், இது தொடர்ந்தால் அடுத்த சப்போர்ட் 47,100 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 47,700 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதே வெள்ளியின் விலையானது சைடுவேயாக இருக்கும் என்று கூறும் நிபுணர்கள், சப்போர்ட் ஆக 68,100 ரூபாயினையும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 69,000 ரூபாயினையும் கணித்துள்ளனர்.

இதே டாலரில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக 1760 டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. தங்கம் விலையானது பெரும்பாலும் ஏற்றம் காணும் விதமாக காணப்படுகிறது. அப்படி ஏற்றம் கண்டால் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1820 டாலர்களாகும். ஒரு வேளை தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்தால், அடுத்த சப்போர்ட் விகிதம் 1725 டாலர் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உறுதியான டாலர் மதிப்பு

உறுதியான டாலர் மதிப்பு

சர்வதேச சந்தையில் உறுதியான டாலரின் மதிப்பு காரணமாக, தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. மேலும் பொருளாதாரம் குறித்த டேட்டாக்கள், அமெரிக்காவின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள், டாலருக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளன. இதனால் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அழுத்தத்தில் காணப்படுகிறது.

கவலையளிக்கும் கொரோனா பாதிப்பு

கவலையளிக்கும் கொரோனா பாதிப்பு

தற்போது இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் என்பது மிக மோசமாக பரவி வருகின்றது. இதனால் தங்கத்தின் தேவையானது குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தங்கத்தின் மீதான ஆர்வம் குறையலாம். இதனால் தங்கம் விலையானது சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய கமாடிட்டி சந்தையிலும், ஆபரண தங்கம் விலையும் தொடர்ந்து குறைந்து வருவதும் கவனிக்கதக்கது.

கூட்டத்தில் முக்கிய முடிவு வருமா?

கூட்டத்தில் முக்கிய முடிவு வருமா?

நாளை முடியவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கிக் கூட்டத்தினை முதலீட்டாளர்கள் கண்கானித்து வருகின்றனர். இதில் அமெரிக்க பொருளாதாரத்தினை மீட்டெடுக்க முக்கிய நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் வரலாமோ என்று எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்க பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புகள் ஏதேனும் வரலாம் என எதிர்பார்க்கின்றனர்.

ஸ்டெடியான பத்திர லாபம்

ஸ்டெடியான பத்திர லாபம்

அமெரிக்க பத்திர சந்தையானது சில தினங்களாகவே சற்று தடுமாற்றத்தில் காணப்பட்ட நிலையில், மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதுவும் இன்னும் டாலரின் மதிப்புக்கு ஊக்கத்தினை அளிக்கிறது. அதோடு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தடுப்பூசிகளும் வேகமாக போடப்பட்டு வருகின்றன. இதனால் பொருளாதாரம் விரைவில் மீண்டு வர இது வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

இன்று வாங்கலாமா?

இன்று வாங்கலாமா?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது. எப்படியிருப்பினும் விலை குறையும் போது வாங்கினால் விரைவில் நல்ல லாபம் கிடைக்கலாம். எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் வாங்க இது நல்ல இடமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices continuously fall for fourth day in a row, silver also trumps

Gold price updates.. Gold prices continuously fall for fourth day in a row, silver also trumps
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X