தங்கம் விலையானது கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிவினை சந்தித்து வரும் நிலையில், இது நடுத்தர மக்கள் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
அதிலும் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதியினை குறைத்த நிலையில், அவ்வப்போது சற்று ஏற்றம் கண்டாலும், தொடர்ச்சியாக சரிவினையே கண்டு வருகின்றது.
குறிப்பாக ஆபரணத் தங்கத்தின் விலையானது, கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து தற்போது சுமார் 8,600 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. ஆக இது நடுத்தர மக்களுக்கும், தங்க நகை ஆர்வலர்களுக்கும் மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
இன்று என்னென்ன பார்க்கலாம்?
அதெல்லாம் சரி இன்று தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் எப்படி உள்ளது? இந்திய கமாடிட்டி வர்த்தகர்த்தில் தங்கம் விலை எவ்வளவு? இந்த இரு சந்தைகளிலும் வெள்ளியின் விலை எவ்வளவு? இன்றைய சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி அடுத்து என்ன செய்யலாம். தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கத்தின் நேற்றைய நிலவரம்
சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தைகள் என இரண்டிலும், தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. தங்கத்திற்கு எதிராக பல காரணிகள் உள்ள நிலையில், நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது காலை அமர்வில் ஏற்றத்தில் இருந்த நிலையில், முடிவில் சற்று குறைந்து முடிவடைந்தது. எனினும் இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று குழப்பத்தினை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் தங்கத்திற்கு எதிராக பல காரணிகள் உள்ள நிலையில், தங்கத்தின் விலை ஏற்றம் காண்கிறதே, இன்று வாங்கலாமா? வேண்டாமா? என்று?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 5.55 டாலர்கள் குறைந்து, 1769.45 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று கீழாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலான 1784 டாலர்களை உடைத்து காட்டியுள்ளது. இன்று தொடக்க விலையும் அதற்கு கீழாக 1770.45 டாலர்களாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மொத்தத்தி தங்கம் விலையானது இன்னும் சரிவினைக் காணும் விதமாகவே காணப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தின் விலையானது பலத்த சரிவினைக் கண்டிருந்தாலும், வெள்ளியின் விலையானது தொடர்ச்சியாக ஏற்றத்திலேயே இருந்துவந்த நிலையில், இன்று வெள்ளியின் விலையும் சரிவில் காணப்படுகிறது. தற்போது 0.77% குறைந்து, 26.885 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வில் 27.078 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 26.615 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியின் விலையும், சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பலத்த சரிவில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலை சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து, 46,006 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவில் 46,126 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 45,986 ரூபாயாகத் தான் தொடங்கியுள்ளது. இதனால் இது இன்றும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையில் சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 664 ரூபாய் குறைந்து, 67,830 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தொடங்கியுள்ளது.
சென்னையில் தங்கம் ஆபரண விலை
சென்னையில் இன்று தங்கம் ஆபரணத்தின் விலையானது மூன்றவாது நாளாக இன்று சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 4,340 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 34,720 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு 992 ரூபாய் தங்கம் விலையானது குறைந்துள்ளது. உண்மையில் இது சாமானியர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
தூய தங்கம் விலை
இதே தூய ( 24 கேரட்) தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில், இன்று கிராமுக்கு 43 ரூபாய் குறைந்து 4,7.5 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 344 ரூபாய் குறைந்து 37,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் கடந்த 3 தினங்களாக சரிவினைக் கண்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது நேற்று ஏற்றம் கண்டு இருந்த நிலையில், இன்று கிராமமுக்கு 2 ரூபாய் குறைந்து 72.30 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும், கிலோவுக்கு 2000 ரூபாய் குறைந்து 72,300 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெள்ளியின் விலையானது பெரியளவில் குறையவில்லை. தற்போது தான் குறைய ஆரம்பித்துள்ளது.
தங்கம் விலை பலமாக சரியலாம்
தங்கம் விலையானது இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 46,000 ரூபாயினை உடைத்து கீழே செல்லும் பட்சத்தில், சந்தை இன்னும் பலவீனமடையும். இதனால் தங்கம் இன்னும் பலத்த சரிவினைக் காணலாம் என்று CapitalVia Investment Advisor கூறியுள்ளார். தங்கத்தின் விலையானது ஏற்கனவே அதனை இன்று உடைத்து காட்டியுள்ளது. (11.43 மணியளவில்) இதுவரையில் தங்கத்தின் குறைந்தபட்ச விலையானது 45,861 ரூபாயாகும்.
வெள்ளி சப்போர்ட் விலை
எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளியின் விலை இதே இடத்தில் இருந்தால், அடுத்த சப்போர்ட் லெவல் 68,500 - 68,000 ரூபாயாகும். ஒரு வேளை ஏற்றம் கண்டால், அடுத்த முக்கிய லெவல் 70,000 ரூபாய் வரை கூட செல்லலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஏழு மாத குறைந்த விலையில் தங்கம்
தங்கம் விலையானது இந்திய சந்தையில் தொடர்ந்து கடந்த ஏழு வர்த்தக அமர்வுகளாக சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது நீண்டகால நோக்கில் வாங்கலாமா என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தொடர்ந்து அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. இது வட்டியில்லா முதலீட்டில் தொடர்ந்து முதலீடுகளை குறைக்க வழிவகுக்கிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ச்சியான சரிவினைக் கண்டு வருகிறது.
மற்ற விலையுயர்ந்த உலோகங்கள்
தங்கம் மட்டும் அல்ல வெள்ளி மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்களின் விலையானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது தொடர்ந்து சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த வாரத்தில் இதுவரையில் வெள்ளி விலையானது சுமார் அவுன்ஸூக்கு 2.5% வீழ்ச்சி கண்டுள்ளது. இதே பிளாட்டினம் விலையும் 2.4% வீழ்ச்சி கண்டுள்ளது.
30 வருடத்தில் மோசமான வீழ்ச்சி
2021ம் ஆண்டில் தொடக்கத்தில் இருந்து வரையில் தங்கம் விலையானது சுமார் 7% வீழ்ச்சியினை கண்டுள்ளது. 1991க்கு பிறகு வருட தொடக்கத்திலேயே இவ்வளவு மோசமான வீழ்ச்சியினை கண்டுள்ளது. 10 வருட பத்திர லாபம், வட்டியில்லா முதலீட்டில் முதலீட்டினைக் குறைத்துள்ளது. எப்படி இருந்தாலும், நிறைய நிபுணர்கள் தங்கம் விலையானது இன்னும் அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர்.
டிஜிட்டல் தங்கமாக உருவெடுக்கும் பிட்காயின்
தங்கம் மற்றும் தங்கம் இடிஎஃப்களில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றது. ஆனால் அதே சமயம் பிட்காயினில் தொடர்ந்து முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. சொல்லப்போனால் தங்கம் ஏழு மாத குறைந்தபட்ச விலையில் காணப்படுகிறது. ஆனால் பிட்காயினோ புதிய உச்சத்திற்கு மேல் உச்சமாக தொட்டு வருகின்றது. ஆக பிட்காயின் டிஜிட்டல் தங்கமாக மாறி வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கத்திற்கு எதிரான காரணி
தங்கத்தின் விலையை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க அரசு, 1.9 டிரில்லியன் டாலர் ஊக்கத்தொகைக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் பொருளாதாரம் விரைவில் மீண்டு வர இது வழிவகுக்கும். இது தங்கத்தின் விலை குறைய இன்னும் சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தங்கம் வாங்கலாமா?
தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சரிவினைக் காணும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு தங்கத்திற்கு எதிராகவே அனைத்து காரணிகளும் வந்து கொண்டுள்ளது. ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து, கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்ல விஷயமே.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications