Gold: அமெரிக்காவின் சிபிஐ தரவு மற்றும் எஃப்ஓஎம்சி-யின் முக்கிய முடிவுகள், வங்கி நெருக்கடி காரணமாக, பணவீக்கம் மீண்டும் அதிகரிக்க ஆம்பித்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை அமர்வில் தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.
சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதன் தாக்கம் இந்திய கமாடிட்டி சந்தையிலும் காணப்படுகின்றது.

கூடுதலாக அமெரிக்க டாலரின் மதிப்பும் அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இது மேலும் 98 என்ற லெவலை எட்டலாம். இதன் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 100 என்ற லெவலிலும் இருக்கலாம். ஆக இதன் காரணமாக தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக தங்கம் அல்லது வெள்ளி எதுவானாலும் விலை குறைந்தாலும் குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.
இது குறித்து ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் சிபிஐ தரவானது 5% ஆக வந்துள்ளது. இது 5.10% ஆக எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அமெரிக்காவின் மத்திய வங்கியானது வங்கி நெருக்கடியானது அதிகரித்து வரும் சூழலில், அது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு வங்கித் துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு, 6.60 டாலர்கள் அதிகரித்து, 2031.30 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருந்தாலும் மீண்டும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல வெள்ளி விலையும் சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 0.45% அதிகரித்து, 25.593 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பியூச்சர் சந்தையினை பொறுத்தவரையில் 10 கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 60,791 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் மேலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது குறைந்தால் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.
வெள்ளி விலையானது இந்திய பியூச்சர் சந்தையினை பொறுத்த வரையில் கிலோவுக்கு, 197 ரூபாய் அதிகரித்து, 76,100 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் மேலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில் சென்னையில் இன்று கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 5676 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 45,408 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 6192 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து, 61,960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே வெள்ளி விலையானது கிராமுக்க்கு 40 பைசா அதிகரித்து, 81.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 81,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Disclaimer: Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications