தங்கம் விலையானது கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முன்பாக தங்க ஆர்வலர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வந்தது.
இந்த நிலையில் இன்றோடு மூன்றாவது நாளாக மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. ஆக இது தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு இது வாங்க சரியான இடமாக பார்ப்படுகிறது.
கமாடிட்டி சந்தைகள் விடுமுறை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இந்திய கமாடிட்டி சந்தையிலும் சற்று ஏற்றத்துடன் கடந்த அமர்வில் முடிவடைந்தது. இதே போல வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்தன. இன்று சனிக்கிழமையாதலால் சந்தைகள் விடுமுறையாகும்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. தற்போது கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 4,435 ரூபாயாகவும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 35,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இன்றோடு தொடர்ச்சியாக தங்கம் விலையானது மூன்றாவது நாளாக அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையில் தூய தங்கத்தின் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 43 ரூபாய் அதிகரித்து 4838 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்து, 38,704 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 48,380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
சென்னையில் ஆபரண வெள்ளி விலை
தங்கம் விலையானது மாற்றம் காணாவிட்டாலும், வெள்ளியின் விலையானது இன்று ஏற்றம் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 0.90 ரூபாய் அதிகரித்து, 68.20 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 900 ரூபாய் அதிகரித்து, 68,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இம்மாத தொடக்கத்தில் இருந்து சரிவினைக் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று சற்று அதிகரித்துள்ளது.
இன்னும் குறையுமா?
தங்கம் விலையானது வரும் வாரத்தில் தேவை அதிகரிக்கலாம் என்பதால், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்பதால் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். உருமாற்றம் அடைந்து வரும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முதலீட்டு நோக்கில் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்பதால் விலை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications