தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 2000 டாலர்களை கடந்து காணப்படுகின்றது. இது 1 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இது தொடர்ந்து அமெரிக்க டாலர் மற்றும் பத்திர சந்தை என பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
ஸ்பாட் கோல்டின் விலையானது 1.8% ஏற்றம் கண்டு, 2020.09 டாலராக ஏற்றம் கண்டுள்ளது. இது மார்ச் 9 அன்று 2024.79 டாலராக உச்சம் தொட்டுள்ளது.
இதே பியூச்சர் தங்கத்தின் விலையானது 2% ஏற்றம் கண்டு, 2040.80 டாலராகவும் உச்சம் தொட்டுள்ளது. இதே ஸ்பாட் சந்தையில் வெள்ளி விலையானது கிட்டதட்ட 4% ஏற்றம் கண்டு, 24.9 டாலராக உச்சம் தொட்டுள்ளது. இதே பலேடியம் விலையானது 1% மேலாக ஏற்றம் கண்டு, 1478 டாலராக உச்சம் தொட்டுள்ளது.
பொருளாதாரம் பதம் பார்க்கலாம்
தொடர்ந்து மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், இனி வரவிருக்கும் அமர்வுகளிலும் அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு பொருளாதாரத்தினை பதம் பார்க்கலாம். இதனை தொடர்ந்து பத்திர சந்தையும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இதுவும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்க காரணமாக அமையலாம்.
ஒபெக் முடிவும் ஆதரவு
ஒபெக் நாடுகள் தொடர்ந்து எண்ணெய் உற்பத்தியினை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், இது பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமையலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
கச்சா எண்ணெய் விலையானது ஒபெக்-ன் அறிவிப்புக்கு பிறகு 6% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இது வரவிருக்கும் நாட்களிலும் கூட விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கலாம்
தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா டாலரின் மதிப்பானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், பத்திர சந்தையும் சரிவில் காணப்படுகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். தொடர்ந்து சர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் இருந்து வரும் நிலையில் இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். மொத்தத்தில் தங்கத்தின் முதலீட்டு தேவை என்பது அதிகரிக்கலாம்.
முக்கிய லெவல்கள்
தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 58,600 ரூபாயினையும், இதே டாலர் மதிப்பு சரிவால் ஏற்றம் காணும் பட்சத்தில் 61,000 ரூபாயினையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே வெள்ளியின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 66,800 ரூபாயாகவும், அதனை உடைத்தால் 75000 ரூபாயினையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து 70,000 ரூபாய்க்கு மேலாக இருக்கும் பட்சத்தில், அடுத்த முக்கிய லெவலை எட்டலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.95 டாலர்கள் அதிகரித்து, 2040.35 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை சற்றே அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 0.39% அதிகரித்து, 25.207 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் இன்று மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் ஜுன் கான்ட்ராக்டில் இன்று 10 கிராமுக்கு, 154 ரூபாய் அதிகரித்து, 61,108 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் இன்று மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளி விலை இன்று கிலோவுக்கு 413 ரூபாய் அதிகரித்து, 75006 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் இன்று மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து, 5690 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து, 45,520 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 98 ரூபாய் அதிகரித்து, 6207 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 980 ரூபாய் அதிகரித்து, 62,070 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 2.90 ரூபாய் அதிகரித்து, 80.70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 2900 ரூபாய் அதிகரித்து, 80,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications