கடந்த ஆண்டில் தங்கம் விலையானது 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், கடந்த 12 மாதங்களாக தங்கம் விலையில் பெரியளவில் ஏற்றம் இல்லை எனலாம்.
நடப்பு தந்தோராஸ் காலத்தில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 47,741 ரூபாயாக காணப்பட்டது. கடந்த ஆண்டில் தந்தோராஸ் சமயத்தில் 50,500 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் இரண்டாவது மிகப் பெரிய நுகர்வோராக இருக்கும் இந்தியாவில், தங்கத்தின் மீதான ஆர்வம் என்பது மிக அதிகம் எனலாம்.
தேவை அதிகரிக்கும்
இது வரவிருக்கும் திருமண விழாக்கள் மற்றும் நடப்பு விழாக்கால பருவம் காரணமாக தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தங்கம் விலையானது தற்போதைய காலத்தில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த விழாக்கால பருவத்தில் இந்திய வீடுகளில் தங்கத்தினை வாங்குவது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா அச்சம்
கடந்த ஆண்டில் தங்கமானது நல்லதொரு லாபம் கொடுத்த முதலீடாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிலும் அப்படி லாபம் கிடைக்குமா? தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்தாலும், உருமாற்றம் அடைந்துள்ள கொரோனாவின் தாக்கம் என்பது பரவுமோ என்ற அச்சம் சந்தையில் நிலவி வருகின்றது.
வட்டி அதிகரிக்கலாம்
தற்போது அமெரிக்காவின் பத்திரம் வாங்குதல் குறித்தான அறிவிப்புகள், அமெரிக்க டாலரின் மதிப்பு, பத்திர சந்தை உள்ளிட்ட பலவும் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் வரவிருக்கும் காலகட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை விரைவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகைகளுக்கு தேவை
மேற்கண்ட பல காரணிகளும் தங்கத்தின் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தினாலும், பணவீக்கம் பற்றிய அச்சமும் எழுந்துள்ளது.
இதற்கிடையில் நகைக்கடை வட்டாரத்தில் நடப்பு விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக டயர் 2 நகரங்களில் தேவையானது நன்கு வளர்ச்சி கண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
ஆர்டர்கள் அதிகரிப்பு
கடந்த இரண்டு வருடங்களாக விழாக்கால பருவத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் தேவை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கத்திற்காக செலவிடுவதும் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 2021ல் முந்தைய ஆண்டினை காட்டிலும் 33% ஆர்டர்கள் அதிகரித்துள்ளது.
சாதகமான காரணி
இதே சில நிபுணர்கள் தங்கம் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது. இது சர்வதேச பொருளாதாரம் ஏற்றம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம் உள்ளிட்ட சில காரணிகளால் தங்கம் விலையில் பெரியளவில் ஏற்றம் இருக்காது. எனினும் பத்திரம் வாங்குதல் குறைக்கப்பட்டால், அது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.
தங்கத்தின் இலக்கு
தங்கத்தின் விலையானது அடுத்த 12 மாதங்களில் 10 கிராமுக்கு 52,000 - 53,000 ரூபாயாக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2,000 டாலர்களை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications