சாமனியர்களுக்கு தங்கம் வாங்க இது செம சான்ஸ்.. உச்சத்தில் இருந்து கிட்டதட்ட ரூ.10,000 வீழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கமானது 8 மாத குறைந்த விலையில் உள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத வரலாற்று உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கத்தின் விலையானது கிட்டதட்ட 10,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் கிட்டதட்ட 2,000 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. அமெரிக்கா டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதையடுத்து, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகிறது.

இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக அமெரிக்க பத்திர லாபமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வட்டியில்லா முதலீடான தங்கத்தில் இது முதலீடுகளை குறைக்க வழிவகுக்கிறது.

தனியார்மயமாக்கப்படும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்.. மோடி அரசு தீவிர ஆலோசனை..! தனியார்மயமாக்கப்படும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்.. மோடி அரசு தீவிர ஆலோசனை..!

இன்று வாங்கலாமா?

இன்று வாங்கலாமா?

எனினும் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தினை வாங்கலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நீண்ட கால நோக்கில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது. ஏனெனில் பல காரணிகள் தங்கத்திற்கு மாறாகவே உள்ளன. அதோடு டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது இன்னும் பையிங் டிரெண்டுக்கு மாறவில்லை. இதனால் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

தங்கம் பாதுகாப்பு புகலிடம்

தங்கம் பாதுகாப்பு புகலிடம்

தங்கம் என்றாலே பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக உள்ளது. இந்த நிலையில் தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை குறைந்த விலையில் வாங்க தூண்டும். அதோடு தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக இருப்பதால், நிச்சயம் அதிகரிக்கலாம். இதனால் இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நடப்பு ஆண்டு நிலவரம்

நடப்பு ஆண்டு நிலவரம்

கடந்த ஆண்டே தங்கம் விலையானது கிட்டதட்ட 25% ஏற்றம் கண்டு, மிகப்பெரிய லாபம் கொடுத்த முதலீடாக இருந்தது. ஒரு தசாப்தத்தில் மிகப்பெரிய வருடாந்திர ஆதாயமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் விரைவில் மீண்டு வந்து கொண்டுள்ளதையடுத்து, இதுவரை 6% சரிவில் உள்ளது. குறிப்பாக தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள், ஊக்கத்தொகைகள் என பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ளன.

சர்வதேச பொருளாதாரம்

சர்வதேச பொருளாதாரம்

கொரோவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பல்வேறு ஊக்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி பாதையினை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. ஆக இது அந்தந்த நாட்டின் நாணயங்களை ஊக்குவிக்கலாம். குறிப்பாக அமெரிக்கா டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் நிலையில், தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.

உச்சத்தில் இருந்து ரூ.10,000 சரிவு

உச்சத்தில் இருந்து ரூ.10,000 சரிவு

எப்படி இருப்பினும் இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையானது, கடந்த ஆகஸ்ட் மாத உச்ச விலையில் இருந்து பார்க்கும்போது, தங்கம் விலையானது கிட்டதட்ட 10,000 ரூபாய் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது முதலீட்டாளர்களை வாங்க தூண்டலாம். இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 8.45 டாலர்கள் அதிகரித்து, 1781.15 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலை ஏற்றத்தில் காணப்பட்டாலும், வெள்ளியின் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகிறது தற்போது 0.08% குறைந்து, 27.300 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 27.315 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 27.483 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் வெள்ளியின் விலை தற்போது சற்று குறைந்திருந்தாலும், சற்று ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது ஏற்றத்தில் உள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 138 ரூபாய் அதிகரித்து, 46,375 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகத் தொடங்கியுள்ள நிலையில், இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் சற்று சரிந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 31 ரூபாய் குறைந்து, 69,199 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக அதிகரித்து தான் தொடங்கியுள்ளது. ஆக இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

Array

Array


இந்திய சந்தையில் தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் விலை 46,000 - 45,900 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் விகிதம் 47,550 - 47,770 ரூபாய் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் விலையானது டாலரின் அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கும் கீழாக உள்ளது. இது தங்கத்தினை இன்னும் அழுத்தத்திற்கு உண்டாக்கலாம். எனினும் இதனை நாம் தொடர்ச்சியாக எதிர்பார்க்க முடியாது. ஊக்கத்தொகை அறிவிப்பு, பணவீக்கம், பணவியல் கொள்கைகளில் மாற்றம் பலவற்றால் இது மாறலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

 

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் தங்கத்திற்கு எதிராகவே பல காரணிகள் உள்ளன. அதோடு நிபுணர்களும் மீடியம் டெர்மில் தங்கம் விலை குறையலாம் என்றும் கணித்துள்ளனர். ஆக தங்கம் விலையானது மீண்டும் குறையலாம். இதனால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்ல விஷயமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices down almost Rs.10,000 from record high

Gold price updates.. Gold prices down almost Rs.10,000 from record high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X