தங்கம் விலையானது கடந்த வாரம் முழுக்கவே அவ்வப்போது சரிந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஏற்றத்தில் தான் காணப்பட்டது.
இதற்கிடையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலை சரிவில் காணப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிவில் தான் காணப்படுகிறது.
எனினும் இந்த சரிவு தொடருமா? இது வெறும் புராபிட் காரணத்தால் குறைகிறதா? இனி அதிகரிக்குமா? அடுத்தது என்ன நடக்கும்? இனி விலை எப்படி இருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன என பல கேள்விகள் எழுந்து வருகின்றன.
சரிவுக்கு என்ன காரணம்
தங்கம் விலையானது வலுவான அமெரிக்க டாலரின் மதிப்பால் சற்று குறைந்து வருகின்றது. ஏனெனில் பங்கு சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து முதலீடுகளை விலக்க தொடங்கியுள்ளனர். அதோடு முதலீட்டாளர்கள் பணவீக்கம் குறித்தான தரவுகள் குறித்து எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.
பங்கு சந்தை ஏற்றம்
பங்கு சந்தையின் அதியளவிலான ஏற்ற இறக்கத்தின் மத்தியில், தங்கத்தின் முதலீட்டு தேவையானது குறையலாம். எப்படியிருப்பினும் உடனடி ரெசிஸ்டன்ஸ் லெவலாக 1815 டாலர்களாகவும், சப்போர்ட் விலையானது 1790 டாலர்களாகவும் உள்ளது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஆசிய சந்தைகள் வரலாற்று உச்சம்
அமெரிக்க சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமர்வில் ஏற்றத்தில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலையில் ஆசிய சந்தைகள் பலவும் வரலாற்று உச்சத்தில் வர்த்தகமாக தொடங்கின. இதனையடுத்து இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதுவும் தங்க முதலீட்டாளர்களை சற்று பொறுத்து முதலீடு செய்ய ஊக்குவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
சர்வதேச அளவில் பொருளாதாரம் குறித்த டேட்டாக்கள் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், உருமாற்றம் அடைந்து வரும் கொரோனாவால் இனி தாக்கம் எப்படியிருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது தங்கம் விலையில் ஏற்படும் அதிக சரிவினைக் தடுத்துள்ளது எனலாம். அதோடு அடுத்தடுத்து வரவிருக்கும் டேட்டாக்களும், இன்னும் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 8.65 டாலர்கள் குறைந்து, 1802.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது விலை அவுன்ஸூக்கு 0.59% குறைந்து, 26.078 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியிலும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 213 ரூபாய் குறைந்து, 47,710 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 354 ரூபாய் குறைந்து, 68,943 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் குறையும் காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது, 20 ரூபாய் குறைந்து, 4,506 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 36,048 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 22 ரூபாய் குறைந்து, 4,916 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து, 39,328 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளி விலையினை பொறுத்த வரையில், இன்று கிராமுக்கு 20 பைசா குறைந்து, 73.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 73,900 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்த நிலையில், இன்று மீண்டும் சற்று குறைந்துள்ளது.
இன்று தங்கத்தினை வாங்கலாமா?
தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே உள்ளது. வெள்ளியின் விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. நீண்டகால நோக்கிலும் நாளை வரவிருக்கும் டேட்டாவினை பொறுத்து வாங்கலாம். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகத்தில் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!



Click it and Unblock the Notifications