வாவ்.. தங்கம் இவ்வளவு குறைந்திருக்கா.. சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு தான்..!

தங்கம் விலையானது சாமானிய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சரிவிலேயே காணப்படுகின்றது.

இது சர்வதேச சந்தையில் மட்டும் அல்லாது ஆபரண தங்கம் விலையும் குறைந்து, சாமானிய மக்களுக்கு நல்ல வாய்ப்பினை கொடுத்துள்ளது.

அதெல்லாம் சரி, சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலை எப்படியுள்ளது? வெள்ளி விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

தங்கம் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலர் மதிப்பானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது அமெரிக்க மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுப்படுத்த அதன் வேகத்தினை அதிகரித்த பிறகு இன்னும் டாலரின் மதிப்பானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்க அதிகரிப்பா?

பணவீக்க அதிகரிப்பா?

எப்படியேனும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வந்தே தீர வேண்டும் என்ற நடவடிக்கைக்கு மத்தியில், வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற போக்கு நிலவி வருகின்றது. இதன் காரணமாக டாலரில் வாங்கும் மற்ற கரன்சிதாரர்களுக்கு தங்கம் விலையானது அதிக விலையுள்ளதாக மாறியுள்ளது. இது தங்கத்தில் முதலீட்டினை குறைத்துள்ளது. இதனால் தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று குறைந்து, 1829.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும், தங்கத்தினை போல சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 20.962 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்து காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு பெரியளவில் மாற்றமின்றி,32 ரூபாய் அதிகரித்து, 50,633 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது.கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 43 ரூபாய் குறைந்து,59,461 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து, 4753 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து, 38,024 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 5185 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து, 41,480 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,850 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலையும் இன்றும் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 660 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+