உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா?

தங்கம் விலையும் ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. எனினும் ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலையானது கடந்த வாரம் பெரும் சரிவினைக் கண்டு வந்த நிலையில், இது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

அதிலும் கடந்த ஆண்டு கண்ட வரலாற்று உச்சத்தில், ரூ.7000க்கு மேல் சரிவில் காணப்படுகிறது. ஆக இது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் தங்கம் விலைக்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், குறைந்த விலை என்பது சாதகமான இடமாக பார்க்கப்படுகிறது. இதனால் நீண்டகால இடமாக பார்க்கப்படுகிறது.

உச்சத்தில் இருந்து ரூ.7000 சரிவு

உச்சத்தில் இருந்து ரூ.7000 சரிவு

இதே கடந்த இரு மாதத்தில் மட்டும் தங்கம் விலையானது 1,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இதே கடந்த மாத ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து 7000 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகிறது. பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டிருந்தாலும், தற்போது வரையிலும் கூட கொரோனாவுக்கு ஒரு முடிவு வந்த பாடாக இல்லை. எனினும் குறைந்த விலையானது, முதலீட்டாளர்களுக்கு தங்கத்தினை வாங்க ஆர்வத்தினை தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வகை கொரோனா பரவல்

புதிய வகை கொரோனா பரவல்

ஏனெனில் பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் கடுமையான லாக்டவுன் பல இடங்களில் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு கண்பிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளும், இந்த புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆக இது தங்கம் விலைக்கு சாதகமாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

டாலரின் மதிப்பு

டாலரின் மதிப்பு

இரண்டாம் கட்ட ஊக்கத்தொகை குறித்து சாதகமான அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் பிடன் அறிவிக்க இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலரின் வலிமை என்னவாகுமோ? என்ற குழப்பமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திர லாபம் என்னவாகும்?

பத்திர லாபம் என்னவாகும்?

ஆக பல்வேறு காரணங்களுக்கு மத்தியில் அமெரிக்கா டாலரின் மதிப்பு என்னவாகுமோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பத்திரங்களின் லாபம் அடுத்து என்னவாகும். என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும், தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். ஏனெனில் பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த உலோகமாக பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையின் சரிவினைத் தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 தங்கத்தில் என்ன செய்யலாம்?

தங்கத்தில் என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், தினசரி கேண்டில் பேட்டர்னிலும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. அதிலும் உச்சத்தில் இருந்து கிட்டதட்ட 7,000 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்களுக்கு இது வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+