செம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினைக் கொடுக்கும் விதமாக, கடந்த சில தினங்களாகவே சரிந்து வருகிறது.

அதுவும் கடந்த வாரத்தில் இருந்தே செம சரிவில் இருந்து வருகின்றது. ஆகஸ்ட் மாத உச்சத்திற்கு பிறகு சரிய தொடங்கிய தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றம் கண்டு வந்தது. எனினும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் நகை வாங்குவோரை குஷிபடுத்தும் விதமாக, ஆபரணத் தங்கத்தின் விலையும் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. இது நகை வாங்க சரியான நேரமாகவும் பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

சரி இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள் உள்ளன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? இன்று வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? என பலவற்றையும் இன்று பார்க்கவிருக்கிறோம்.

சர்வதேச பங்கு சந்தைகள் ஏற்றம்

சர்வதேச பங்கு சந்தைகள் ஏற்றம்

கடந்த சில தினங்களாகவே முதலீட்டாளரகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், சர்வதேச சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலையானது செம சரிவினை கண்டு வருகிறது. ஏனெனில் சர்வதேச சந்தைகள் ஏற்றத்தினைக் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளது. இதுவும் விலை குறைய ஒரு காரணமாக அமைந்துள்ளது.

அதிகரித்து வரும் முதலீடு

அதிகரித்து வரும் முதலீடு

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதன் காரணமாக சந்தைகள் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே அன்னிய முதலீடுகள் பங்கு சந்தைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மேலும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் செய்துள்ள முதலீடுகளையும் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கம் விலை சரிந்து வருகின்றது.

தங்கம் விலை சரிய முக்கிய காரணம்?

தங்கம் விலை சரிய முக்கிய காரணம்?

இன்றோடு கடந்த ஐந்து தினங்களாகவே தங்கம் விலையானது தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சரிந்து வருகிறது. ஏனெனில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு முக்கிய காரணம் தடுப்பூசி பற்றிய செய்திகள் தான். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்

பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும்

சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், கொரோனா பரவல் அதிகரித்தாலும், தடுப்பு மருந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். இதனால் உலகின் முன்னணி நாடுகளின் பொருளாதாரம் விரைவில் மேம்படலாம். பொருளாதார மீட்சி குறித்தான நடவடிக்கைகளும் அதிகரிக்கும். இதனால் விரைவில் மீண்டும் வரும் என்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பப்படுகிறது. ஆக இதனால் முடங்கிபோன நிறுவனங்கள் மேம்பட தொடங்கும். இதனால் பங்கு விலைகள் அதிகரிக்கும். இதனால் தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என்ற கணிப்பு இருந்து வருகின்றது.

அமெரிக்கா ஜனாதிபதி

அமெரிக்கா ஜனாதிபதி

அமெரிக்காவின் புதிய ஜனாபதியாக தேர்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், விரைவில் வெள்ளை மாளிகைக்கு திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படலாம். ஏனெனில் வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில், பொருளாதார வீழ்ச்சியும் மிக அதிகம். இதனால் பொருளாதாரத்தினை விரைவில் மீட்கும் பொருட்டு, ஊக்கத் தொகைகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

எனினும் கொரோனாவின் பாதிப்பும் நாளுக்கு நாள் சில நாடுகளில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அதிக விலை சரிவினைக் தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த சில வர்த்தக தினங்களாகவே செம சரிவில் இருந்து வரும் தங்கம் விலையானது இன்று வீழ்ச்சி கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸ் தங்கம் விலை சற்று குறைந்து, 1805 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது கடந்த சில தினங்களாக சரிந்து வந்தாலும், நீண்டகால நோக்கில் இது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி நிலவரம்

வெள்ளியின் விலையும் தங்கத்தின் விலையை போல கடந்த சில தினங்களாவே வீழ்ச்சியினை கண்டு வருகின்றது. தொடர்ச்சியான முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஐந்தாவது நாளாகவும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. தற்போது 0.80% குறைந்து, 23.175 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலை, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று குறைய தொடங்கியுள்ளது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 27 ரூபாய் குறைந்து, 48,490 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்று 48,517 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 48,508 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்

வெள்ளியின் விலையும் சற்று வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், இன்றும் கிலோவுக்கு 430 ரூபாய் குறைந்து, 59,440 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, சற்றே கீழே இன்று தொடங்கியுள்ளது. இதுவும் இன்று இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும், குறுகிய கால நோக்கில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க இது நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices down for fifth day in a row, its great chance to buy?

Gold price update.. Gold prices down for fifth day in a row, its great chance to buy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X