உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.5000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா? வாங்கலாமா?

போகிற போக்கை பார்த்தால் தங்கம் விலையானது நிபுணர்கள் கூறுவதை போல, விரைவில் வரலாற்று உச்சத்தினை தாண்டி விடும் போல.

கடந்த சில தினங்களாகவே சற்று வீழ்ச்சியினை கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இன்று விலை அதிகரித்தாலும், விலை கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் 5,162 ரூபாய் சரிவில் தான் உள்ளது.

சரி இன்றைய விலை நிலவரம் என்ன? எம்சிஎக்ஸ், சர்வதேச சந்தை நிலவரம் என்ன? தங்கம் மற்றும் வெள்ளியின் ஆபரண விலை எவ்வளவு? என்னென்ன காரணங்கள்? இன்று எப்படி இருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த வர்த்தக அமர்வில் காலை நேரத்தில் தங்கம் விலையானது சரிவில் இருந்த நிலையில், முடிவில் ஏற்றத்தினை கண்டது. இதற்கிடையில் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 5.15 டாலர்கள் அதிகரித்து 1910.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது நேற்றைய உச்சமான 1911.10 டாலர்களை உடைத்து, இன்று 1912.95 டாலர்களாக உச்சம் தொட்டுள்ளது. ஆக இன்று சற்று ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் 2089.20 டாலர்களை உச்சத்தி

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நேற்றோடு கடந்த நான்கு தினங்களாகவே சரிந்த வெள்ளியின் விலையானது, இன்று சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. தற்போது கிலோ வெள்ளியின் விலை 0.83% அதிகரித்து, 24.625 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது நேற்றைய முடிவு விலையினை விட சற்று கீழாகவே குறைதுள்ளது கவனிக்கதக்கது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

கடந்த மூன்று தினங்களாக சற்று சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 59 ரூபாய் அதிகரித்து, 50,989 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் 7 அன்று 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 5,162 ரூபாய் சரிவிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது கடந்த மூன்று தினங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 62,400 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 77,700 ரூபாயாக அதிகரித்தது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 15,268 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஏற்றத்திற்கு என்ன காரணம்?

ஏற்றத்திற்கு என்ன காரணம்?

தங்கம் விலையானது சர்வதேச சந்தைகள், டாலரின் அழுத்தம், சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் பலரும் தொடர்ந்து தங்களது கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், அனைத்து காரணிகளும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளன.

டாலரின் மதிப்பு அழுத்தம்

டாலரின் மதிப்பு அழுத்தம்

மேலும் அடுத்த நவம்பர் முதல் வாரத்தில் வரவிருக்கும் அமெரிக்கா தேர்தல், தேர்தலில் யார் ஜெயிப்பார்கள், அமெரிக்காவின் ஊக்கத்தொகை குறித்தான அறிவிப்பு இவையாவும் நிலையற்றதாகவே உள்ளது. ஆக இவையனைத்தும் தங்கத்திற்கு ஆதரவாகவே அமைந்துள்ளன. இதன் காரணமாக டாலரின் மதிப்பு அழுத்தத்திலேயே காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது. இனியும் ஏற்றம் காண வழிவகுக்கலாம்.

முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்

முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்

அதோடு வட்டி குறைவு, பணவீக்கம் என பலவும் தங்கத்திற்கு ஆதரவாகவே இருந்து வருகின்றன. அதிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது குறைந்தபட்ச விலையில் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கணிப்பு

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கணிப்பு

ஆக இப்படியாக ஒட்டுமொத்தமான அனைத்து நிபுணர்களும் தங்கம் விலையானது அடுத்தாண்டுக்குள் அதிகரிக்கும் என்றே கூறி வருகின்றனர். இது குறித்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆண்டு இறுதிக்குள் அவுன்ஸூக்கு 2000 டாலர்களையும், அடுத்த ஆண்டு முதல் காலண்டில் 2,100 டாலர்களையும் எட்டலாம் என்று கணித்துள்ளது.

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

டாலரில் தங்கத்தில் முக்கிய சப்போர்ட் விகிதம் அவுன்ஸூக்கு $1,892 - 1,884
ரெசிஸ்டன்ஸ் லெவல் - $1920 - 1933

ரூபாயில் தங்கத்தில் முக்கிய சப்போர்ட் விகிதம் அவுன்ஸூக்கு ரூ.50,780 - 50,600
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.51,050 - 51,200

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

டாலரில் வெள்ளியின் முக்கிய சப்போர்ட் விகிதம் அவுன்ஸூக்கு $24.24 24
ரெசிஸ்டன்ஸ் லெவல் - $24.70 - 25

ரூபாயில் வெள்ளியின் முக்கிய சப்போர்ட் விகிதம் அவுன்ஸூக்கு ரூ.61,300 - 60,500
ரெசிஸ்டன்ஸ் லெவல் - ரூ.62,500 - 63,300

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+