உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6100க்கு மேல் வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா?

கடந்த 2020 ஒரு வழியாக முடிந்து புத்தாண்டும் முடிந்து விட்டது. ஆனால் தற்போதும் கூட கொரோனாவுக்கு ஒரு முடிவு வந்த பாடாக இல்லை. எனினும் கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை நடந்து கொண்டுள்ளது. இது ஒரு வகையில் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்னவாகுமோ என்ற உணர்வும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏனெனில் பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்படும் நிலை இருந்து வருகின்றது.

இதன் காரணமாக மீண்டும் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கலாமோ என்ற நிலையும் இருந்து வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும், தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம்

முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம்

கடந்த ஆண்டிலேயே தங்கம் விலையானது கடந்த ஆண்டில் 27 சதவீதம் அதிகரித்தும், வெள்ளி விலையானது 50 சதவீதம் அதிகரித்தும் காணப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு மருந்து பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், இனி விலை அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என முதலீட்டாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

உச்சத்தில் ரூ.6,100க்கு மேல் வீழ்ச்சி

உச்சத்தில் ரூ.6,100க்கு மேல் வீழ்ச்சி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து, தங்கம் விலையானது கடந்த ஆண்டிலிருந்து பார்க்கும்போது 6,100 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக முதலீட்டாளர்களுக்கு 6,100 ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆக மொத்தத்தில் இது வாங்க சரியான நேரம் தான். இது குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்களுக்கு சரியான நேரம் தான்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்தியாவினை பொறுத்த வரையில் வரவிருக்கும் காலங்களில் தங்கம் தேவையானது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்து, 6,100 ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது. ஆக இது வாங்க முதலீட்டாளர்களுக்கு சரியான நேரம் தான்.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை சர்வதேச சந்தையில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். ஏனெனில் பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஆபரணமாக பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது கொரோனா தடுப்பூசி 95 சதவீதத்திற்கும் மேலாக பலனளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+