உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா?

கடந்த சில தினங்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வரும் தங்கம் விலையானது, இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

கடந்த சில தினங்களாகவே சற்று ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இன்று விலை அதிகரித்தாலும், விலை கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்திலிருந்து பார்க்கும் போது தங்கம் விலையானது 7000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. .

சரி இன்றைய சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? எம்சிஎக்ஸ் சந்தை நிலவரம் என்ன? தங்கம் மற்றும் வெள்ளியின் ஆபரண விலை எவ்வளவு? என்னென்ன காரணங்கள்? இன்று எப்படி இருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம்

  1. qசர்வதேச சந்தையில் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே காலையில் ஏற்றத்தில் இருந்த நிலையில், மாலை நேர வர்த்தகத்தில் தங்கம் விலையானது சரிவில் முடிவடைந்துள்ளது. அந்த வகையில் இன்றும் ஏற்றத்தில் காணப்பட்டாலும், மாலை நேரத்தில் சரியுமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நேற்றைய முடிவில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1832.10 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 1830.65 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது. இந்த நிலையில் தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 10.40 டாலர்கள் அதிகரித்து 1842.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் இது நேற்றைய உச்சமான 1845.60 டாலர்களை உடைத்து சென்றாலும், அது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. எப்படி இருந்தாலும் தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான 2089.20 டாலர்களுடன் ஒப்பிடும்போது, 246.7 டாலர்கள் சரிவில் தான் காணப்படுகிறது.
சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையுடன் ஒப்பிடும்போது வெள்ளியின் விலையும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த மூன்று வர்த்தக அமர்வுகளாகவே சற்று சரிந்த வெள்ளியின் விலையானது, இன்று ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலை 0.80% அதிகரித்து, 24.240 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் வெள்ளியின் விலையானது நேற்றைய முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

கடந்த ஒரு வாரமாகவே இந்திய சந்தையில் தங்கம் விலையானது ஒரு நாள் ஏற்றம் கண்டாலும், அடுத்த நாள் சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 252 ரூபாய் அதிகரித்து, 49,191 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் 7 அன்று 56,200 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 7000 ரூபாய்க்கு மேல் சரிவிலேயே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையானது கடந்த சில தினங்களாக தடுமாற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்று கிலோவுக்கு 477 ரூபாய் அதிகரித்து, 63,948 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சமான வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 77,700 ரூபாயாக அதிகரித்தது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 13,752 ரூபாய் குறைவாகத் தான் உள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஏற்றத்திற்கு என்ன காரணம்?

ஏற்றத்திற்கு என்ன காரணம்?

தங்கம் விலையானது சர்வதேச சந்தைகள் சரிவு, டாலரின் அழுத்தம், சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் உள்ளிட்ட பல காரணிகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் பலரும் தொடர்ந்து தங்களது கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், சில காரணிகள் தங்கத்திற்கு ஆதரவாகவே அமைந்துள்ளன.

பொருளாதாரத்தில் அழுத்தம்

பொருளாதாரத்தில் அழுத்தம்

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், வளர்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஊக்கத் தொகை குறித்தான அறிவிப்புகளும் தாமதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவில் சர்வதேச பங்கு சந்தைகள்

சரிவில் சர்வதேச பங்கு சந்தைகள்

அமெரிக்காவின் ஊக்கத்தொகை குறித்தான அறிவிப்புகள் இதுவரையில் அறிவிக்கப்படாத நிலையில், தற்போது வரையில் நிலையற்றதாகவே உள்ளது. ஆக இவையனைத்தும் தங்கத்திற்கு ஆதரவாகவே அமைந்துள்ளன. இதன் காரணமாக டாலரின் மதிப்பு அழுத்தத்திலேயே காணப்படுகிறது. இதனால் சர்வதேச பங்கு சந்தைகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்

முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக, கொரோனா இறப்புகளும் அண்டை நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மீண்டும் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. ஒரு புறம் கொரோனா தடுப்பு மருந்து இவற்றிற்கு சாதகமாக அமைந்தாலும், அதிகரித்து வரும் தாக்கம் மீண்டும் கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமையன்று அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை 3 லட்சத்தினையும் தாண்டியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பு புகலிடத்தினை தஞ்சமடைய வழிவகுத்துள்ளது.

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங்

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங்

அதிகரித்து வரும் பணவீக்கம் ஒரு புறம் கவலையளிக்கும் விதமாக இருந்தாலும், இது மறுபுறம் பாதுகாப்பு புகலிடமாகவும், சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் உள்ளமையால், தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. அதோடு தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது, ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்த்தால், பலத்த சரிவிலேயே இருப்பதால் இது முதலீட்டாளர்களுக்குவாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+