தட தட சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பால் மக்கள் கொரோனா காலத்தில் கூட, ஆன்லைனில் வாங்கி குவித்தனர். அந்தளவுக்கு நம்மவர்களுக்கு தங்கத்தின் மீது மோகம் உண்டு.

 

அப்படியானவர்களுக்கு கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. ஆக இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

அதிலும் ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து நிலையில், இது நகை வாங்க நல்ல நேரமாகவும் உள்ளது.

என்னென்ன பார்க்கபோகிறோம்?

என்னென்ன பார்க்கபோகிறோம்?

அதெல்லாம் சரி, இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? கூடிருக்கா குறைந்திருக்கா? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள்? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? இன்று வாங்கலாமா? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

தங்கத்திற்கு சாதகமான கொரோனா தடுப்பூசி

தங்கத்திற்கு சாதகமான கொரோனா தடுப்பூசி

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, நான்கு மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசியே. கண்ணுக்கு தெரியாத நுண்கிருமி உலகெங்கிலும் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கொரோனா தடுப்பூசியின் முடிவுகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அது நெருக்கடியான நிலையை மாற்றும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

பட்டையை கிளப்பும் சர்வதேச பங்கு சந்தைகள்
 

பட்டையை கிளப்பும் சர்வதேச பங்கு சந்தைகள்

ஆசிய பங்கு சந்தைகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலை குறைந்து வருகின்றது. தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதன் காரணமாக சந்தைகள் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அன்னிய முதலீடுகள் பங்கு சந்தைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மேலும் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளையும் வெளியே எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவும் தங்கம் விலை சரிந்து வருகின்றது.

தங்கம் Vs டாலர் மதிப்பு

தங்கம் Vs டாலர் மதிப்பு

தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு மற்றும் தடுப்பூசி பற்றிய சாதகமான விஷயத்தினால் சற்று வலுவாக காணப்படுகிறது. ஆகவும் இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்கா ஊக்கத் தொகை பற்றிய அறிவுப்புகள் வரும் பட்சத்தில், அது தங்கம் விலை இன்னும் சரிய
காரணமாக அமையும். தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு மற்றும் தடுப்பூசி பற்றிய சாதகமான விஷயத்தினால் சற்று வலுவாக காணப்படுகிறது. ஆகவும் இதுவும் தங்கம் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்கா ஊக்கத் தொகை பற்றிய அறிவுப்புகள் வரும் பட்சத்தில், அது தங்கம் விலை இன்னும் சரிய
காரணமாக அமையும்.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் நிலவரம்

காமெக்ஸ் தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த சில வர்த்தக தினங்களாகவே தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வருகிறது. நேற்று மட்டும் 46 டாலர்களுக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் வீழ்ச்சி காண தொடங்கியுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 12.05 டாலர்கள் குறைந்து, 1825 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதமான 1848 டாலர்களை உடைக்கும் பட்சத்தில், இது இன்னும் சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை நேற்றே உடைத்து விட்டது. இதனால் தங்கம் விலையானது இன்னும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி நிலவரம்

தங்கத்தின் விலையினை போலவே வெள்ளியின் விலையும் நேற்று பலமான வீழ்ச்சியினை கண்டுள்ளது. இந்த நிலையில் இன்றும் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது 0.65% குறைந்து, 23.470 டாலர்களாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 23.560 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 23.562 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 464 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 49,020 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. நேற்று 49,480 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 49,262 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலை பலத்த வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், கிலோவுக்கு, இன்றும் கிலோவுக்கு 572 ரூபாய் குறைந்து, 59,932 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, சற்றே கீழே இன்று தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

இன்று தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் வாங்கலாமா?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும் மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் 1948 டாலர்களை உடைத்தால், அது 1800 டாலர்கள் வரை கூட செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே உள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

தங்கம் விலை குறையலாம்

தங்கம் விலை குறையலாம்

தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை இன்னும் குறையலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கத்தின் அடுத்த சப்போர்ட் லெவல் 1811 - 1800 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1858 டாலர்களாகும்.
இதே இந்திய சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவல் 49,220 - 48,900 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,800 ரூபாயாகும்.

வெள்ளி விலை எப்படியிருக்கும்?

வெள்ளி விலை எப்படியிருக்கும்?

வெள்ளியின் விலை 23.80 டாலர்/ 60,600 ரூபாயினை உடைத்து சென்றால் அடுத்த சப்போர்ட் லெவல் 23.20 - 22.80 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1858 டாலர்களாகும்.
இதே இந்திய சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவல் 60,000 - 59,500 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,800 ரூபாயாகும்.

 சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இன்று பலத்த வீழ்ச்சி கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 108 ரூபாய் குறைந்து, 4644 ரூபாயாகவும், இதுவே சவரனுக்கு 864 ரூபாய் குறைந்து, 37,152 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த வாரத்தில் இருந்து அவ்வப்போது சரிவினைக் கண்டு வந்தாலும், மொத்தமாக பார்க்கும் போது விலை குறைந்தே காணப்படுகிறது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தினை விட, தூய தங்கத்தின் விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இது கிராமுக்கு 118 ரூபாய் குறைந்து, 5,066 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 944 ரூபாய் குறைந்து 40,528 ரூபாயாகவும் காணப்படுகிறது.

 ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரணத் தங்கத்தினை போல வெள்ளியின் விலையும் இன்று பலமான சரிவினைக் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 2.20 ரூபாய் குறைந்து, 64.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 2,200 ரூபாய் குறைந்து, 64,500 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியோ அல்லது தங்கமோ வாங்குபவர்களுக்கு இது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices down Rs.1,200 in just two days

Gold price update.. Gold prices down Rs.1,200 in just two days
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X