தொடர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக கடந்த சில தினங்களாகவே சரிந்து வருகிறது.

 

அதுவும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும் போது இது பெரும் சரிவாகும். ஆகஸ்ட் மாத உச்சத்திற்கு பிறகு சரிய தொடங்கிய தங்கம் விலையானது அவ்வப்போது ஏற்றம் கண்டு வந்தது. எனினும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

இது தங்கம் வாங்குபவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையில், இது நகை வாங்க நல்ல நேரமாகவும் பார்க்கப்படுகிறது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள் உள்ளன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? இன்று வாங்கலாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? என பலவற்றையும் இன்று பார்க்கவிருக்கிறோம்.

சர்வதேச பங்கு சந்தைகள் ஏற்றம்

சர்வதேச பங்கு சந்தைகள் ஏற்றம்

முதலீட்டாளரகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் சர்வதேச சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலையானது 4 மாதங்களில் இல்லாத அளவு விலை வீழ்ச்சியினை சந்தித்துள்ளது. ஏனெனில் சர்வதேச சந்தைகள் ஏற்றத்தினைக் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் கவனம் பங்கு சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளது. இதுவும் விலை குறைய ஒரு காரணமாக அமைந்துள்ளது.

தங்கத்திற்கு ஆதரவான காரணிகள்
 

தங்கத்திற்கு ஆதரவான காரணிகள்

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்தாலும், தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், பொருளாதாரம் விரைவில் மீண்டு வரும். இதன் காரணமாக சந்தைகள் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அன்னிய முதலீடுகள் பங்கு சந்தைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மேலும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் செய்துள்ள முதலீடுகளையும் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கம் விலை சரிந்து வருகின்றது.

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள்

கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சரிந்து வருகிறது. இன்று உலகெங்கிலும் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு முக்கிய காரணமே இந்த கொரோனா தான். ஆனால் கொரோனா தடுப்பூசியினால் ஒட்டுமொத்த உலகிலும் நிலவி வரும் நெருக்கடியான நிலை சரியாகி, பொருளாதாரம் மீளத் தொடங்கும். இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் விரைவில் வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம். துவண்டு போன நிறுவனங்களும் துளிர் விடத் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

எனினும் மேற்கண்ட பல செய்திகள் தங்கத்திற்கு எதிராக இருந்தாலும், அமெரிக்காவின் ஊக்கத் தொகை பற்றிய எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வரவில்லை. அதே சமயம் கொரோனாவின் பாதிப்பும் நாளுக்கு நாள் சில நாடுகளில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில
பகுதிகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த சில வர்த்தக தினங்களாகவே பெரும் வீழ்ச்சி கண்டு வரும் தங்கம் விலையானது, தொடர்ச்சியாக இந்த வார தொடக்கத்தில் இருந்தே பலத்த வீழ்ச்சி கண்டு வருகிறது. தொடர்ச்சியாகவும் வீழ்ச்சி கண்டு வருகிறது. இந்த நிலையில் இன்றும் வீழ்ச்சி காண தொடங்கியுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 3.75 டாலர்கள் குறைந்து, 1800 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் அனைத்து முக்கிய சப்போர்ட் விகிதங்கள் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கம் விலையானது இன்னும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி நிலவரம்

வெள்ளியின் விலையும் தங்கத்தின் விலையினை போலவே பலமான வீழ்ச்சியினை கண்டு வருகின்றது. இந்த வாரத்தில் தொடக்கத்திலிருந்தே தொடர்ச்சியாக முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இன்றும் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது 0.56% குறைந்து, 23.172 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 23.300 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 23.297 டாலர்களாக தொடங்கியுள்ளது, இது இன்னும் சரியலாம் என்பதையே சுட்டிக் காட்டுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலை, சர்வதேச சந்தையின் எதிரொலியாக பலத்த வீழ்ச்யை கண்டு வருகின்றது. தற்போது இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 130 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 48,455 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. நேற்று 48,585 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 48,497 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்னும் வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்

இந்திய சந்தையிலும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலை பலத்த வீழ்ச்சியில் தான் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், கிலோவுக்கு, இன்றும் கிலோவுக்கு 290 ரூபாய் குறைந்து, 59,331 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, சற்றே கீழே இன்று தொடங்கியுள்ளது. இதுவும் இன்று இன்னும் குறையும் விதமாகவே காணப்படுகிறது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறினாலும் மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் 1948 டாலர்களை உடைத்தால், அது 1800 டாலர்கள் வரை கூட செல்லலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அதனையும் உடைத்து நேற்று 1797 டாலர்களை சென்றுள்ளது. இந்த நிலையில் தற்போது 1800 டாலர்களாக உள்ள நிலையில், மீண்டும் அதனை உடைத்து சென்றால் இன்னும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை இன்னும் குறையலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் தங்கத்தின் அடுத்த சப்போர்ட் லெவல் 1792 - 1780 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1814 - 1822 டாலர்களாகும்.
இதே இந்திய சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவல் 48,400 - 48,280 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 48,800 - 49,050 ரூபாயாகும்.

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

இதே இந்திய சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவல் 58,300 - 57,500 ரூபாயாகும். இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 60,300 - 61,500 ரூபாயாகும்.

தங்கமோ அல்லது வெள்ளியோ தற்போதைக்கு மீடியம் டெர்மில் விலை குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வாங்குவது நல்லது, அதிலும் தங்கத்தில் வாங்கும்போது டிசம்பர் கான்ட்டிராக்ட் அடுத்த வாரத்தில் எக்ஸ்பெய்ரி ஆகவிருப்பதால், பிப்ரவரி கான்ட்டிராக்டில் வாங்கி வைக்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices down Rs.1,800 in 3 days, silver also down

Gold price update.. Gold prices down Rs.1,800 in 3 days, silver also down
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X