அடி சக்க.. தங்கம் விலை ரூ.1,800 வீழ்ச்சியா.. இப்போது வாங்கி வைக்கலாமா..!

கொரோனாவின் தாக்கதினையடுத்து உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில், ஒரு வணிகம் மட்டும் செப்பனே நடந்து கொண்டுள்ளது என்றால் அது ப்யூச்சர் தங்கம் தான்.

அது சர்வதேச சந்தையாகட்டும், இந்திய கமாடிட்டி வர்த்தகமாகட்டும் எந்த அளவு விலை ஏறிக் கொண்டிருந்ததோ, அந்தளவுக்கு கடந்த சில சந்தை தினங்களாக விலை சரிந்து கொண்டு இருக்கிறது.

சரி என்ன காரணம் கொரோனாவின் தாக்கம் தான் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளதே. பின் எப்படி விலை மட்டும் எப்படி தொடர்ந்து சரிகிறது. காரணம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்

சிறந்த வாய்ப்பு

சிறந்த வாய்ப்பு

கிட்டதட்ட கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை சரிந்து கொண்டுள்ள நிலையில், முதலீட்டாளர்களின் பார்வை அமெரிக்கா பொருளாதாரத்தின் மீது தொடங்கியுள்ளது எனலாம். ஏனெனில் அமெரிக்கா ஜனாதிபதி விரைவில் லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்படும் என்று கூறி வரும் நிலையில், அது முதலீட்டாளார்களுக்கும் சிறந்த வாய்ப்பாக அமையலாம் என்றும் கருதப்படுகிறது.

ஸ்பாட் கோல்டின் விலை

ஸ்பாட் கோல்டின் விலை

ஸ்பாட் கோல்டின் விலையானது அவுன்ஸூக்கு 0.5% வீழ்ச்சி கண்டு, 1,675.92 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த ஏப்ரல் 9-ல் இருந்து ஒப்பிடும்போது குறைந்த விலையாகும். கடந்த வெள்ளிக் கிழமையன்று மட்டும் இந்த விலையுயர்ந்த உலோகம் 2% குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே அமெரிக்க சந்தையில் விலை 0.7% குறைந்து அவுன்ஸூக்கு 1687.20 டாலர்களாகவும் வர்த்தகமாகியுள்ளது.

சிறு வணிகர்களுக்கு உதவ நடவடிக்கை

சிறு வணிகர்களுக்கு உதவ நடவடிக்கை

அது மட்டும் அல்ல ஜனநாயக கட்சியினரும் சரி, குடியரசுக் கட்சியினரும் சரி சிறு வணிகங்களுக்கு உதவ கூடுதல் பணத்தினை அங்கீகரிப்பதற்கான உடன்படிக்கைக்கு அருகில் உள்ளனர். இது திங்கட்கிழமைக்குள் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஆக இது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்க பொருளாதாரத்தினை விரைவில் மேம்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தேவை மந்தம்

தேவை மந்தம்

சீனாவில் லாக்டவுன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும், தொடர்ந்து அங்கு தொடர்ந்து தங்கத்தின் தேவையானது மந்த நிலையிலேயே உள்ளது. இதனால் டீலர்ஸ் நுகர்வோருக்குகாக அதிகளவிலான தள்ளுபடிகளையும் வாரி வழங்கி வருகின்றனராம். ஆக இதுவும் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது எனலாம்.

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஐந்தாவது சந்தை தினமாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்று தற்போது அவுன்ஸூக்கு 0.09% குறைந்து 1,697.30 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் 1685.15 டாலர் வரை சென்ற விலையானது, தற்போது 1698.05 டாலர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையினை பொறுத்த வரையில் இன்று தற்போது 0.37% அதிகரித்து 15.355 டாலரகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய இரண்டு சந்தை அமர்வுகளிலும் விலை சற்று குறைந்திருந்த நிலையில், தற்[போது சற்று ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கம் விலையானது, தற்போது 74 ரூபாய் குறைந்து, 45,661 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் கடந்த வாரம் முழுவதும் பலமான ஏற்றத்தினை கண்டிருந்தாலும், வார இறுதியான வெள்ளிக்கிழமைலிருந்து சுமார் 1800 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போல சர்வதேச சந்தையில் எதிரொலியாக கடந்த இரண்டு தினங்களாகவே, இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளியின் விலை குறைந்து வருகிறது. இன்று தற்போது வரையில் 76 ரூபாய் குறைந்து 42,730 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தங்க ஆபரணம் விலை

தங்க ஆபரணம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 9 ரூபாய் சரிந்து 4,043 ரூபாயாகவும், தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 32,344 ரூபாயாகவும் குறைக்கபப்ட்டுள்ளது. இதே 24 கேரட் கிராம் தங்கத்தின் விலை 4,412 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 35,296 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

எனினும் வெள்ளியின் விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு 1.54 ரூபாய் அதிகரித்து, 42.70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 42,700 ரூபாயாகவும் உள்ளது. சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக வெள்ளி விலையானது கடந்த இரண்டு தினங்களாக சற்று ஏற்றம் கண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+