பழங்காலம் முதல் இன்று வரை மாறாத ஒரே விஷயம் தங்கம் தான். தங்கத்தின் மீதான பிரியம் தான். ஆண்கள் முதல் பெண்கள் வரை, குழந்தைகள் முதல் வயதான பாட்டி வரை விரும்பி அணியப்படும் ஒரே உலோகம் தங்கம்.
இப்படி ஒரு பொருளின் விலை குறைகிறது என்றால் சும்மாவா? உலகம் முழுவதும் இதனை வாங்கி வைப்பவர்கள் எத்தனை பேர்? அது ஆபரணமாகவும் சரி, முதலீடாகவும் சரி. அன்று முதல் இன்று வரை நம் மக்களின் முதலீட்டில் முதல் இடம் தங்கத்திற்கு தான்.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா சீனா ஒப்பந்தம் விரைவில் போடப்படலாம் என்ற கணிப்பு தான்.
உச்சம் தொட்ட தங்கம்
கடந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது, கடந்த செப்டம்பர் மாதத்தில் 40,000 மேல் உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் அக்டோபர் நவம்பரில் சற்று சரிய தொடங்கியது. இந்த நிலையில் செப்டம்பர் மாத உச்சத்திலிருந்து தங்கத்தின் விலையானது 2,400 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. பங்கு சந்தைகளில் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தாலும், ஆபரண தங்கத்தின் விலையானது அந்தளவுக்கு குறையவில்லை.
விலை எப்படி?
இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தற்போது 37641 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலையானது தொடர்ந்து 37,780 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமானால் அது, கீழ் நோக்கிய அழுத்தத்துடனேயே காணப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் அடுத்தடுத்த சப்போர்ட் லெவல் 37,560, 37, 470 ரூபாயை தொடலாம் என்றும் ஜியோஜித் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் கமாடிட்டி ஆய்வாளர் ஹரீஷ் லைவ் மின்டுக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதே விலை அதிகரிக்கும் பட்சத்தில் 38,300, 38350ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகலாம் என்றும் கருதப்படுகிறது.
சர்வதேச சந்தையில் எப்படி?
அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்ததிற்கான முதல் கட்ட நிலையை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவும் சீனாவும் நெருக்கமாக இருப்பதாக டெனால்டு டிரம்ப் கடந்த செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளும் அடுத்தடுத்த பேச்சு வார்த்தைகளும் போன் மூலமாக அடுத்தகட்டத்திற்கு நகர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 1466.35 டாலராக வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச பங்கு சந்தைகள்
அமெரிக்கா- சீனா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக உலகளாவிய பங்கு சந்தைகள் சற்று வலுவடைந்துள்ளன. இதன் விளைவாக தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம் குறித்தான செய்திகள் தங்கத்தின் குறுகிய கால வேகத்தை அதிகரிக்கலாம். ஆனால் ஒப்பந்தம் குறித்தான எந்தவொரு குறிப்பும் பொருளாதார மந்த நிலையின் அச்சத்தை எளிதாக்கும். இது சந்தைகளின் மேல் உள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். பொருளாதாரம் குறித்த நேர்மறையான பார்வை தங்கத்தின் விலையை குறைக்கும்.
விலை சற்று குறையலாம்
டாலர் வலுவடையும் போது தங்கத்தின் விலை குறைதல். மேலும் உயர்மட்ட நுகர்வோரிடமிருந்து தங்கத்திற்கான தேவை மோசமடைவதும் பின்னர் விலை இறக்க இன்னும் வழிவகுக்கும். இதே இந்திய ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரை, பெரிய அளவில் இறக்கம் இல்லாவிட்டாலும் சற்று விலை குறைய வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!



Click it and Unblock the Notifications