உலகமே கொரோனாவால் அரண்டு போய் கிடக்க, மறுபுறம் தங்கம் விலையானது சத்தமேயில்லாமல் ஏற்றம் கண்டு வந்தது.
கொரோனா வைரஸின் தாக்கத்தின் மத்தியில் தங்கம் விலையானது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த மாதத்தில் புதிய உச்சத்தினை (Rs.48,000 மேல்) தொட்டது.
எனினும் தற்போது பல நாடுகளில் அளிக்கப்பட்டுள்ள லாக்டவுன் தளர்வின் காரணமாக பொருளாதாரம் புத்துயிர் பெற தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் ஏற்றம் காணலாம் என்ற உணர்வும் முதலீட்டாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.
தங்கம் விலை குறைய ஆரம்பித்துள்ளது
சர்வதேச சந்தையானது சற்று ஏற்றம் காணலாம் என்ற நிலையே நீடித்து வருகிறது. அதோடு கொரோனா காரணமாக பல நாடுகளில் நீட்டிக்கப்பட்டிருந்த லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வேலை விகிதமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது சற்று குறைய ஆரம்பித்துள்ளது. இதே வெள்ளியின் விலையும் கடந்த மாத உச்சத்திலிருந்து சற்று குறைய ஆரம்பித்துள்ளது.
உச்சத்திலிருந்து வீழ்ச்சி
முந்தைய நாள் சந்தையானது ஏற்றம் கண்டுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தொடர்ந்து இன்றும் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. ஆகஸ்ட் மாத கான்ட்டிராக்டில் தங்கத்தின் விலையானது முந்தைய நாள் சந்தையில் 400 ரூபாய் குறைந்த நிலையில், வெள்ளியின் விலையானது 900 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் தங்கம் சென்ற 48,000 ரூபாயான உச்ச விலையிலிருந்து 2000 ரூபாய் குறைந்துள்ளது.
டாலரின் மதிப்பு
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தங்கம் விலையானது கடந்த மாதத்தில் கிடு கிடுவென அதிகரித்தது. அந்த நேரத்தில் அமெரிக்கா டாலரின் மதிப்பானது மற்ற நாட்டு நாணயங்களோடு ஒப்பிடும்போது, 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இதனால் தங்கத்தின் மதிப்பானது பலமான ஏற்றம் கண்டது.
சிறந்த ஹெட்ஜ்
இந்த நிலையில் நாளை முடிவடையவிருக்கும் ஃபெடரல் கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையிலும் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தங்கமானது பணவீக்கத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஒரு ஆப்சனாக பயன்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தற்போது அவுன்ஸூக்கு 2.90 டாலர் குறைந்து 1702.55 டாலராக வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் இரண்டாவது நாளான இன்று தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், இனியும் குறையுமா? என்பது சந்தேகமானாலும் இன்று சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தற்போது 10 கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, 46,064 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இன்று தங்கத்தின் விலையானது சற்று குறைந்திருந்தாலும், பெரியளவில் மாற்றம் இல்லை.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. இது தற்போது 0.065 டாலர்கள் குறைந்து 17.828 டாலராக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையினை பொறுத்த வரையில் தொழில் துறைகள் மீண்டு வந்து கொண்டு இருப்பதால், நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் ஆபரண தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில் பெரியளவில் மாற்றம் ஏதும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. திங்கட்கிழமையன்று கிராமுக்கு 4435 ரூபாயாக இருந்த நிலையில்., சவரனுக்கு 35,480 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications