மனித வாழ்வில் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை மக்களால் விரும்பி அணியப்படும் ஆபரணங்களில் ஒரு உன்னதமான உலோகம் தான் தங்கம்.
அதிலும் பிறந்த குழந்தைக்கு அணிவிக்கும் ஆபரணம் முதல் கொண்டு, திருமண நிகழ்வு வரை முக்கிய அம்சமாக கருதப்படும் தங்கம் விலை இப்போது குறைந்துள்ளது.
இத்தகைய தங்கத்தின் விலை குறைந்துள்ளது, அதுவும் 100 - 200 ரூபாய் அல்ல. 10 கிராம் தங்கத்தின் விலை 2,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தங்கம் விலை அதிகரிப்பு
இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது செப்டம்பர் மாதம் வரையில் ஏற்றம் கண்டு வந்தது. அக்டோபர் மற்றும் நடப்பு மாதத்தில் தான் சற்று சரிவடைய தொடங்கியுள்ளது. அதிலும் சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரித்தது. அதிலும் ஆபரண தங்கத்தின் விலையானது சொல்லவே வேண்டியதில்லை. ரெக்கை ஒன்று தான் இல்லை பறப்பதற்கு. அந்தளவுக்கு ஏற்றம் கண்டது.
இறக்குமதி வரி அதிகரிப்பு
ஒரு புறம் தங்கத்தின் இறக்குமதியினை தடுக்க மத்திய அரசு இறக்குமதி வரியினை அதிகரித்தது. இதன் விளைவாக இறக்குமதி குறைந்தது. எனினும் தங்கத்திற்காக பயன்பாடு குறைந்ததாக தெரியவில்லை. இதனால் சர்வதேச சந்தையில் பல வீழ்ச்சி கண்டாலும் அதன் முழு எதிரொலி இந்தியாவில் இல்லை என்றே கூறலாம். இதனாலேயே இந்தியாவில் தங்கத்தின் விலையானது நிலையானதாகவே இருந்தது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை
இந்த நிலையில் இந்திய எம்.சி.எக்ஸ் சந்தையில் நடப்பு ஆண்டு தொடக்கத்தில் 31,554 ரூபாயாக இருந்தது. இதே மே மாதத்தில் 37,959 ரூபாயாக அதிகரித்தது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 41,000 ரூபாயை தொட்டது. இந்த நிலையில் இன்று 37,926 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் அக்டோபரில் சரிய ஆரம்பித்த விலையானது அவ்வப்போது சிறிது ஏற்றம் கண்டாலும், சர்வதேச சந்தையின் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்பட்டது.
இன்று எப்படி சவரன் விலை
காமாடிட்டி பங்கு வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது வீழ்ச்சி கண்டாலும், ஆபரண தங்கத்தின் விலையில் அவ்வளவாக சரிவு ஏற்படவில்லை. எனினும் சர்வதேச சந்தையின் எதிரொலியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,646 ரூபாயாகவும், இதே 10 கிராம் தங்கத்தின் விலையானது 36,450 ரூபாய்க்கும், இதே ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 29168 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
வர்த்தக ஒப்பந்தம் போடலாம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, 0.5 சதவிகிதம் குறைந்து 1,464.17 டாலராக இருந்தது. அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் விரைவில் முடிவுக்கு வரலாம். விரைவில் இரு நாடுகளுக்கும் சாதகமான நிலையில் வர்த்தக ஒப்பந்தம் போடப்படலாம் என்றும் கருதப்பட்டு வரும் நிலையில், தங்கத்தின் விலையானது இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டது.
வட்டி குறைப்பு செய்யலாம்
இந்த நிலையில் தங்கத்தின் மீதான முதலீடுகளை குறைந்ததையடுத்து, சர்வதேச பங்கு சந்தைகளில் வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை ஏற்கனவே வட்டியை குறைத்தாலும், நலிந்த நிலையில் உள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த மீண்டும் ஒரு வட்டி குறைப்பை செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிக்கலாம்
இந்தியாவைப் பொறுத்த வரையில் தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலி, இந்திய சந்தையிலும் காணப்பட்டது. நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் விலையானது 14 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இந்தியாவில் தொடர்ந்து தங்கம் விலை நிலையாக உள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் வாரங்களில் முகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதால், தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications