ரூ.2500 சரிவில் தங்கம் விலை.. இது இன்னும் குறையுமா.. வாங்க சரியான நேரமா..!

தங்கம் விலையானது கடந்த வாரம் முழுக்க தொடர்ந்து சரிவினைக் கண்டது. இதற்கிடையில் இந்த வாரத்தில் தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

எப்படியிருப்பினும் இந்த மாதத்தில் இதுவரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு சுமார் 2,500 சரிவில் தான் காணப்படுகிறது. அதோடு வரலாற்று உச்சத்தில் இருந்தும் 9,000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் விலை குறையுமா? அல்லது அதிகரிக்குமா? இன்று வாங்கலாமா? வேண்டாமா? காமெக்ஸ் சந்தையில் விலை நிலவரம் என்ன? எம்சிஎக்ஸ் சந்தையில் விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கம் விலை என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.30 டாலர்கள் குறைந்து, 1780.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. நேற்றைய உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து, பின்னர் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று அதிகரித்திருந்தாலும், வெள்ளியின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். தற்போது விலை அவுன்ஸூக்கு 0.25% குறைந்து, 25.962 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை, தற்போது 10 கிராமுக்கு 116 ரூபாய் குறைந்து, 46,970 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று இன்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் இன்று வெள்ளியின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 210 ரூபாய் குறைந்து, 67,552 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து, 4,465 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 35,720 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 33 ரூபாய் அதிகரித்து, 4,871 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 264 ரூபாய் அதிகரித்து 38,968 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் தற்போது வரையில் பெரியளவில் மாற்றமில்லை. இன்று கிராமுக்கு சற்று அதிகரித்து, 73.20 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 73,200 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது.

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

தங்கம் விலையானது இம்மாத தொடக்கத்தில் 49,500 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இதற்கிடையில் இன்று 47000 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. ஆக மொத்தத்தில் தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 2500 ரூபாய் குறைந்து காணப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய சப்போர்ட்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட்

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தடுமாறி வரும் நிலையில், இந்திய சந்தையில் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அப்படி தங்கம் விலையானது குறைந்தால், 46,800 - 46600 ரூபாய் என்பது அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக இருக்கும்.

முதலீட்டார்கள் கவனம்

முதலீட்டார்கள் கவனம்

தங்கத்தின் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது, வலுவாக காணப்பட்டாலும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் 2023 வரை தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் இது பணவீக்கத்திற்கு வழிவகுக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. இது தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே இருந்தாலும், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+