கடந்த சில அமர்வுகளாக தங்க ஆபரணத்தின் விலையானது சற்று ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இது பெரியளவில் குறையாவிட்டாலும், சற்று குறைந்துள்ளதே நல்ல விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட திருமணம் போன்ற விழாக்கள் இனி அதிகளவில் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுக்கிறது. இதனால் தங்கத்திற்கான தேவையும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மீடியம் டெர்மில் தங்கம்
அதோடு தற்போது வலுவான அமெரிக்கா டாலர், தங்கத்தின் விலையை இன்னும் மற்ற நாணயதாரர்களுக்கு விலை அதிகமுள்ளதாக மாற்றலாம். இதனால் தற்போது தங்கம் விலையானது தற்போது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. எப்படி இருப்பினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கும் விதமாக காணப்படுகிறது. இது சந்தைக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
வார கேண்டில் பேட்டர்ன்
மேலும் தங்கத்திற்கு சாதகமாக சில காரணிகள் இருந்தாலும், வார கேண்டில் பேட்டர்னில் தங்கம் விலையானது சரியும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை இன்னும் குறையுமோ? என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவும் தங்க வர்த்தகர்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்கம் Vs தங்கம்
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் உள்பட பல அதிகாரிகள், தற்போதைக்கு நாணயக் கொள்கையில் மாற்றம் இருக்காது தொடர்ந்து உறுதிபடுத்தி வரும் நிலையில், தற்போதைக்கு வட்டி விகிதம் அதிகரிக்காது என்பதால், பணவீக்கம் பற்றிய அச்சமும் எழுந்துள்ளது. இது பணவீக்கத்திற்கு எதிரான தங்கத்திற்கு நல்ல வாய்ப்பாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச வெள்ளி விலை
தங்கத்தின் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். தற்போது விலை அவுன்ஸூக்கு சற்று 0.65% குறைந்து, 25.933 டாலர்களாக காணப்படுகிறது.
இந்திய தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 177 ரூபாய் குறைந்து, 46,895 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று இன்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 377 ரூபாய் குறைந்து, 67,555 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மூன்று நாட்களுக்கு பிறகு இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 4,440 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 35,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய தங்கம் விலை
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று குறைந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 16 ரூபாய் குறைந்து, 4,844 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து, 38,752 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண வெள்ளி விலை
ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 30 பைசா குறைந்து, 73.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 73,100 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது.
தங்கத்தின் முக்கிய லெவல்கள்
தங்கத்தின் விலையானது சற்று சரிந்துள்ள நிலையில் அதன் முக்கிய சப்போர்ட் லெவல் - 1772 - 1758 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 1794 - 1804 டாலர்களாகும்.
இந்திய சந்தையில் சப்போர்ட் லெவல் - 46,920 - 46,800 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 47,300 - 47,480 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் - 67,500 - 67,100 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 68,400 - 68,800 ரூபாயாகும்
தங்கத்தினை வாங்கலாமா?
தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று குறைந்த பின்னர் வாங்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம்.
More From GoodReturns

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications