தடுமாறும் தங்கம் விலை.. 2 நாளில் ரூ.1600 சரிவு.. இன்னும் குறையுமா.. வாங்கலாமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த வாரம் முழுக்க தொடர்ந்து சரிவினைக் கண்டது. இதற்கிடையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தைகளில் பெரியளவில் மாற்றமின்றி தடுமாற்றத்தில் காணப்படுகிறது.

சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..! சொன்னதை செய்தார் ஸ்டாலின்.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்.. ஆளுநர் பன்வாரிலால் அறிவிப்பு..!

இது இன்றும் விலை குறையுமா? அல்லது விலை அதிகரிக்குமா? இன்று வாங்கலாமா? வேண்டாமா? காமெக்ஸ் சந்தையில் விலை நிலவரம் என்ன? எம்சிஎக்ஸ் சந்தையில் விலை நிலவரம் என்ன? ஆபரண தங்கம் விலை என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? முக்கிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், பல இடங்களில் மக்கள் வாங்க முடியாத நிலையே நிலவி வருகின்றது. ஏனெனில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, அத்தியாவசியம் தவிர மற்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ளன. ஆக விலை குறைந்திருந்தாலும், மக்கள் வாங்க முடியாத நிலையே இருந்து வருகின்றது. எனினும் இதற்கு மாற்றாக டிஜிட்டல் தங்கம் சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

காமெக்ஸ் சந்தையில் தங்கம்

சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.35 டாலர்கள் குறைந்து, 1,767.65 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய அமர்வின் முடிவினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் பொறுத்திருந்து வாங்கலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் வாங்கலாம்.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி

தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இதனால் மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கலாம். தற்போது விலை அவுன்ஸூக்கு 1.39% குறைந்து, 25.608 டாலர்களாக காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை தற்போது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 82 ரூபாய் குறைந்து, 46,646 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று இன்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு உச்சத்தோடு ஒப்பிடும்போது 9,400 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக இது நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 821 ரூபாய் குறைந்து, 66,777 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. ஒரு கிராம் ( 22 கேரட் ) தங்கத்தின் விலையானது கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 4,435 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து 35,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ( 24 கேரட் ) தங்கத்தின் விலையானது 9 ரூபாய் அதிகரித்து, 4,838 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து 38,704 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் தற்போது வரையில் பெரியளவில் மாற்றமில்லை. இன்று கிராமுக்கு 73.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 73,100 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்த நிலையில், இன்று மீண்டும் மாற்றமின்றி காணப்படுகிறது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தங்கம் விலையானது இந்திய சந்தையில் கடந்த இரண்டு அமர்வில் மட்டும் 1600 ரூபாய் சரிவில் காணப்படுகிறது. இது டாலரின் மதிப்பு வலுவாக காணப்படும் நிலையில் சரிவிலேயே காணப்படுகிறது. அதோடு முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை தொடர்ந்து புராபிட் புக்கிங் செய்து வரும் நிலையில், இதுவும் சந்தைக்கு எதிரான ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது.

தேவை சரிவு

தேவை சரிவு

தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் சீனா மற்றும் இந்தியாவில் தற்போது தங்கத்திற்கான தேவை மிக குறைவாகவே உள்ளது. விலை குறைவாகவே இருந்தாலும், மக்கள் கைகளில் பணப்புழக்கம் குறைவாக உள்ள நிலையில், வாங்குவது குறைந்துள்ளது. ஆக இதுவும் தங்கம் விலை குறைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

இன்று தங்கத்தினை வாங்கலாமா?

தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே இருந்தாலும், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். இதே போல வெள்ளியின் விலையும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices down today, silver also fall today

Gold price latest updates.. Gold prices down Rs.1,600 in 2 days and then rise today
Story first published: Monday, June 21, 2021, 12:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X