கடந்த ஐந்து வர்த்தக தினங்களாக தங்கம் விலையானது தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு வருகிறது. இதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று குறைந்து வருகிறது.
உண்மையில் தங்கம் வாங்குவோருக்கு இது நல்ல வாய்ப்பு தான். ஏனெனில் குறைந்த விலையில் தங்கம் வாங்க இது நல்ல வாய்ப்பாக அமையுமே.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக சர்வதேச சந்தையில் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தடுமாற்றத்திலேயே

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?
சரி இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? தங்கத்திற்கு சாதகமாக என்னென்ன காரணிகள்? நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? குறுகிய கால நோக்கில் தங்கம் விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்க விருக்கிறோம்.

தங்கம் Vs டாலர்
தங்கத்தின் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பு சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலையானது இன்றும் அழுத்தத்தில் காணப்படுகின்றது. தங்கத்திற்கு ஆதரவாகவும் உள்ளது. அதோடு அமெரிக்கா ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் எதிரொலி, இன்னும் ஊக்கத்தொகை அறவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது.

அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள்
ஒரு புறம் தடுப்பூசி பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டு இருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சில பகுதிகளில் கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக புதிய வகை கொரோனா பரவலின் அச்சமும் நிலவி வருகின்றது. இதன் காரணமாக தடுப்பூசியே செயல்பாட்டுக்கு வந்தாலும், அது எந்தளவுக்கு கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. ஆக இது தங்கத்தின் அதிக விலை சரிவினை தடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழப்பத்தில் முதலீட்டாளர்கள்
முதலீட்டாளர்கள் மத்தியில் மிக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஊக்கத் தொகை குறித்தான சரியான அறிவிப்புகள் வந்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்கவின் பத்திரங்கள் லாபம் அதிகரித்து வருகின்றன. இது மற்றொரு ஊக்கத்தொகைக்கு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வரவிருக்கும் ஜோ பிடனின் நிர்வாகம் தங்கம் போன்ற வட்டியில்லாத முதலீடுகளில், முதலீட்டினை குறைத்துள்ளது.

Comex தங்கம் நிலவரம்
சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் பலமான வீழ்ச்சி கண்டு வந்த தங்கம் விலை, வாரத்தின் முதல் நாளான இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது, தற்போது அவுன்ஸூக்கு 2 டாலர்கள் குறைந்து, 1833.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. தங்கம் விலையானது முந்தைய அமர்வு, கடந்த வாரத்தில் கண்ட குறைந்தபட்ச விலையை உடைத்து காட்டியுள்ளது. அடுத்த முக்கிய சப்போர்ட் லேவலான 1820 டாலர்களை உடைக்கும் பட்சத்தில் தங்கம் விலையானது இன்னும் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comex வெள்ளி நிலவரம்
தங்கத்தின் விலையானது குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலை சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் நன்கு வீழ்ச்சி கண்ட நிலையில், இன்றும் சற்று வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் தற்போது 0.50% அதிகரித்து, 24.750 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளி விலை கடந்த அமர்வில் 25.133 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 24.125 டாலர்களாக தொடங்கியுள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் நிலவரம்
சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 33 ரூபாய் அதிகரித்து, 49,000 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக, கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று குறைவாகத் தான் காணப்படுகிறது. தற்போது சற்று ஏற்றத்தில் இருந்தாலும், விலையானது குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி நிலவரம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. எம்சிஎக்ஸ் வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில், இன்று கிலோவுக்கு 137 ரூபாய் அதிகரித்து, 64,365 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, சற்றே கீழே இன்று தொடங்கியுள்ளது. இதனால் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

இன்று தங்கம் வாங்கலாமா?
நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று முதலீட்டாளர்கள் கூறி வரும் நிலையில், இன்றும் நீண்ட கால நோக்கில் வாங்கி வைக்கலாம். ஆனால் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக அதற்கேற்ப முதலீட்டாளர்கள், பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.