சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. இன்று என்ன செய்யலாம்.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை அதிகரிப்பதற்கான அனைத்து சாத்திய கூறுகள் இருந்தும், இந்திய கமாடிட்டி சந்தையில் விலை சரிவில் காணப்படுகிறது.

 

உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் அமெரிக்கா தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், யார் ஜெயிப்பார்களோ என்ற பெரும் எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா டாலரின் மதிப்பு 0.16% சரிந்து, 39.993 டாலர்களாக காணப்பட்டாலும், பங்கு சந்தைகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது.

முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு

முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு

அமெரிக்க தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தாலும், யார் ஜெயித்தாலும் நிச்சயம் ஊக்கத்தொகை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது எவ்வளவு? அது பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்குமா? சந்தை ஏற்றம் காணுமா? வட்டி விகிதம் மாற்றம் காணுமா? இந்த வாரத்தில் வரவிருக்கும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஏதும் இருக்குமா? இப்படி பல கேள்விகளும் குழப்பங்களும் தான் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

இதனாலேயே சர்வதேச தங்கம் விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை எனலாம். தற்போது அவுன்ஸூக்கு 1 டாலர் அதிகரித்து, 1,893.30 டாலர்களாக உள்ளது. எனினும் நேற்றைய முடிவு விலையானது 1892.50 டாலர்களாக இருந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1895.45 டாலர்களாக தொடங்கியுள்ளது கவனிக்கதக்கது.

சர்வதேச வெள்ளி விலை
 

சர்வதேச வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் 0.42% ஏற்றம் கண்டு 24.142 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலை நேற்று 24.033 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று 24.152 டாலர்களாக தொடங்கியுள்ளது. சீனாவின் வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் டெக்னிக்கல் பேட்டர்ன் என அனைத்தும் வெள்ளிக்கு சாதகமாகவே இருந்து வருகின்றன. இதனால் வெள்ளியின் விலை அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 142 ரூபாய் குறைந்து, 50,925 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. நேற்றைய முடிவு விலையானது 51,067 ரூபாயாக இருந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 50,950 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது இன்று சற்று வீழ்ச்சி காணும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் எந்த காரணிகளும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய காமடிட்டி வர்த்தகத்தினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்பட்டாலும், வெள்ளியின் விலையானது அவ்வளவாக குறையவில்லை என்றே கூறலாம். தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 27 ரூபாய் குறைந்து, 61,980 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவு விலையானது 62,007 ரூபாயாக முடிவுற்ற நிலையில், 61,987 ரூபாயாக காணப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பு

தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பு

பலத்த எதிர்ப்பாபர்ப்புகளுக்கு மத்தியில், அமெரிக்கா தேர்தலில் ஜோ பைடனுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இது குறித்தான கவலை முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் தங்களது முதலீடுகளை பாதுகாக்கும் பொருட்டு முதலீடுகளை செய்யாமல் காத்துக் கொண்டுள்ளனர்.

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

இரண்டாம் கட்ட கொரோனா பரவல்

தேர்தல் எதிர்பார்ப்புகள் ஒரு புறம் இருந்தாலும், இதன் முடிவு இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். ஆனால் தற்போது இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது, மீண்டுமொரு லாக்டவுனுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வதும் கடினம். இதனால் முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தினை நோக்கில் படையெடுக்கவே இது வழிவகுக்கும். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் பார்க்கப்படும் நிலையில், தங்கம் விலை நிச்சயம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பே நிலவி வருகின்றது. இது பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர, வரும் தூண்டுதல் நடவடிக்கைகளை பொருத்தே தங்கத்தின் விலை எதிர்காலத்தில் இருக்கும். நடப்பு ஆண்டில் இந்த விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை இதுவரை 24%க்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது கவனிக்கதக்கது.

வட்டி விகிதம் மாற்றம் இருக்காது?

வட்டி விகிதம் மாற்றம் இருக்காது?

நடப்பு வாரத்தில் ஃபெடரல் ஓபன் மார்கெட் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை லெவல்ஸ்

தங்கம் விலை லெவல்ஸ்

பிரித்வி கமாடிட்டி நிபுணர் மனோஜ் ஜெயின் தங்கம் மற்றும் வெள்ளிக்கான லெவல்களை கணித்துள்ளார். அதன் படி,
தங்கத்திற்கான சப்போர்ட் லெவல்ஸ் - $1884 - 1866
ரெசிஸ்டன்ஸ் லெவல்ஸ் - $1900 - 1920

எம்சிஎக்ஸ் தங்கம் சப்போர்ட் லெவல்ஸ் - ரூ.50,800 - 50,660
ரெசிஸ்டன்ஸ் லெவல்ஸ் - ரூ. 51,300 - 51,500

 

வெள்ளி லெவல்ஸ்

வெள்ளி லெவல்ஸ்

வெள்ளிக்கான சப்போர்ட் லெவல்ஸ் - $23.70 - 23.40
ரெசிஸ்டன்ஸ் லெவல்ஸ் - $24.40 - 24.80

எம்சிஎக்ஸ் வெள்ளி சப்போர்ட் லெவல்ஸ் - ரூ.61,400 - 60,800
ரெசிஸ்டன்ஸ் லெவல்ஸ் - ரூ.62,800 - 63,500

 

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று அமெரிக்க தேர்தலின் எதிரொலியாக சர்வதேச சந்தையில், தங்கம் விலையானது பெரிய அளவில் மாற்றம் காணவில்லை. எனினும் இந்திய சந்தையில் சரிவில் காணப்படுகிறது. நீண்டகால நோக்கில் தங்கத்தின் விலையானது அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறி வரும் நிலையில், நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க சரியான இடம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices drop in Indian commodity market

Gold prices drop in Indian commodity market, silver rates edging in lower
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X