Gold price today: தங்கம் விலையானது 10 கிராமுக்கு 50,200 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இது தான் இந்த மாதத்தில் குறைந்தபட்ச விலையாகும். கடந்த வாரத்தில் 52,000 ரூபாய் என்ற லெவலுக்கு உச்சத்தினை எட்டியது.
இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இங்கு தீபாவளி தந்தோராஸ் காரணமாக பிசிகல் தங்கத்திற்கான தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தங்க டீலர்கள் தங்கத்திற்கான தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது பிரீமிய விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
பிரீமிய விலையில் தங்கம்
கடந்த வாரத்தில் தங்கம் விலையானது 6 டாலர்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அவுன்ஸூக்கு 1.5 டாலர் பிரீமியத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, தங்கத்தின் விலையுடன் கூடாக இந்தியாவில் 15% இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி 3% சேரும் எனலாம்.
தங்கம் விலை தொடர் அழுத்தம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. காமெக்ஸ் தங்கம் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று, 1.6% சரிவினைக் கண்டு, அவுன்ஸூக்கு 1650 டாலர்களாக காணப்படுகின்றது. கடந்த வாரத்தில் மட்டும் 3% சரிவினைக் கண்டிருந்தது. அமெரிக்க டாலர் மற்றும் பத்திர சந்தையின் ஏற்றம் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது.
முதலீடுகள் குறையலாம்
தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திரம், அமெரிக்க டாலர் மதிப்பால், முதலீட்டாளார்கள் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளனர். கடந்த வாரம் வெளியான அமெரிக்காவின் நுகர்வோர் குறியீடானது மேற்கோண்டு வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது பணவீக்கத்தினையும் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அழுத்தம் இருக்கலாம்
ஆக தற்போதைய நிலையில் தங்கம் விலையானது மேற்கொண்டு அழுத்தத்திலேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் டாலரும் தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றலாம். இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 6.35 டாலர்கள் அதிகரித்து, 1655.30 டாலர்களாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலை உடைக்கவில்லை. ஆக இது மீடியம் டெர்மில் பெரியளவில் மாற்றமின்றி சைடுவேயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது அவுன்ஸூக்கு 1.28% அதிகரித்து, 18.302 டாலர்களாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை.எனினும் மீடியம் டெர்மில் பெரியளவில் மாற்றமின்றி சைடுவேயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications