Gold: தங்கம் விலையானது வலுவான டாலரின் மதிப்பால் சற்றே அழுத்தத்தில் காணப்பட்டாலும், 2000 டாலர்களுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தவிர இன்னும் பல முக்கிய பொருளாதார தரவுகள் வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக அமெரிக்காவின் முக்கிய சில்லறை விற்பனை குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஜிடிபி குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பணவீக்கமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது அடுத்த 12 மாதங்களுக்கு தொடரலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது மார்ச் மாதத்தில் சரிவினைக் கண்ட நிலையில், வரவிருக்கும் மாதத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது அவுன்ஸூக்கு 8.70 டாலர் அதிகரித்து, 2024.45 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது டெக்னிக்கலாக சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலையானது அவுன்ஸூக்கு 0.20% அதிகரித்து, 25.495 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது டெக்னிக்கலாக இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதே இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராமுக்கு 257 ரூபாய் அதிகரித்து, 60,580 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறைந்து, மீண்டும் நீண்டகால நோக்கில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலையும் இந்திய கமாடிட்டி சந்தையில் கிலோவுக்கு 233 ரூபாய் அதிகரித்து, 75,910 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் டெக்னிக்கலாக சற்று குறைந்து பின்னர் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் சென்னையில் இன்று இதுவரையில் விலையில் மாற்றம் காணவில்லை. இது கிராமுக்கு 5650 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 45,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 6164 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 10 கிராமுக்கு 61,640 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
இதே ஆபரண வெள்ளியினை பொறுத்தவரையில் கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 81.60 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 81,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
Disclaimer: Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications