தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Gold price update: தங்கம் விலையானது வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று சற்றே அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை மெதுவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு! தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு!

தங்கத்தினை ஹோல்டு செய்யலாம்

தங்கத்தினை ஹோல்டு செய்யலாம்


எப்படியிருப்பினும் அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை வாங்கி ஹோல்டு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
ஏற்கனவே தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக தங்கம் விலையானது உச்சத்தினை எட்டி வரும் நிலையில், 9 மாத உச்சமான 1939 டாலராக காணப்படுகின்றது.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

கார்ப்பரேட் வருவாய் வீழ்ச்சி, பணி நீக்கம், ரெசசன் என பல காரணிகளுக்கு மத்தியில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என கோடக் செக்யூரிட்டீஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினை எட்டிய நிலையில், 1618 டாலர்களை எட்டியது. எனினும் அதன் பிறகு தொடர்ச்சியாக தங்கம் விலையானது ஏற்றத்திலேயே இருந்து வருகின்றது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

தொடர்ந்து பணவீக்க விகிதமானது குறைவாக இருந்து வரும் நிலையில், இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பணவீக்கம் குறைந்தாலும் நீண்டகால காலத்திற்கு வட்டி விகிதம் உச்சத்திலேயே இருக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 சீனாவும் ஆதரவு அளிக்கலாம்

சீனாவும் ஆதரவு அளிக்கலாம்

கடந்த 4 மாதங்களில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 7000 ரூபாய் அதிகரித்து காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சர்வதேச சந்தையின் எதிரொலியாக ஏற்றம் காணலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது. மேலும் சீனாவிலும் தற்போது நிலைமை மேன்மையடைத் தொடங்கியுள்ள நிலையில், இதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1929.10 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் இருக்கலாம் என்றும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு காலையில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சற்று அதிகரித்து, 24.090 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 113 ரூபாய் அதிகரித்து, 56,771 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 444 ரூபாய் அதிகரித்து, 68,991 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 5323 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 42,584 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது வரவிருக்கும் நாட்களில் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து , 5807 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து , 58,070 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்துள்ளது. இது கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, 74.70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 74,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices edges on softer dollar: federal may slowdown hopes

Gold prices edges on softer dollar: federal may slowdown hopes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X