தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் சாமானிய மக்கள் சேமிப்பிற்காக அதிகளவிலான தங்கத்தை வாங்கு சூழ்நிலை உருவாகியுள்ளது. தங்கம் விலை சரிவதற்குப் பல காரணங்கள் இருக்கிறது, குறிப்பாக அமெரிக்கப் பத்திர சந்தை முதலீடுகள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள் ஆகியவை தங்கம் விலை தொடர்ந்து சரிய முக்கியக் காரணமாக விளங்குகிறது.
இந்தச் சூழ்நிலையில் தங்கம் விலை அடுத்த சில மாதத்தில் 48,000 ரூபாயை தாண்டும் எனக் கணிப்பு வெளியாகியுள்ளது.
சூயஸ் கால்வாய்
சூயஸ் கால்வாய் பிரச்சனை முடிவடைந்தால் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தற்காலிக உயர்வு விரைவில் சரியும், இதேபோல் அமெரிக்கா பத்திர சந்தை முதலீட்டில் கிடைக்கும் லாப அளவீடுகள் மந்தநிலையை அடைந்துள்ளது.
தங்கம் மீதான முதலீடு
இவற்றின் காரணமாகச் சர்வதேச சந்தையில் தங்கம் மீதான முதலீடு அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக அடுத்த சில வாரங்களில் தங்கம் விலை உயரத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
48,000 ரூபாயைத் தாண்டும்
இந்நிலையில் IIFL செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனுஜ் குப்தா அடுத்த 2 மாத காலகட்டத்தில் தங்கம் விலை 48,000 ரூபாயைத் தாண்டும் எனக் கணித்துள்ளார்.
பிரெண்ட் கச்சா எண்ணெய்
இதேவேளையில் கோல்டுமேன் சாச்சீஸ் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை இந்தக் கோடைக்காலத்தில் 80 டாலர் வரையில் உயரும் எனக் கணித்துள்ளதையும் அனுஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
குறுகிய கால முதலீட்டாளர்கள்
இதனால் தங்கம் மீது குறுகிய கால முதலீட்டாளர்களுக்குச் சிறப்பான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதேவேளையில் தங்கம் விலை 48,000 ரூபாயை அடையும் போது இந்தியச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டாளர்கள் தங்கத்தை லாப நோக்கத்திற்காக விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அனுஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications