தங்கம் விலை 3வது நாளாக சர்ப்ரைஸ்.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது மூன்றாவது நாளாக இன்றும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தங்க ஆர்வலர்களுக்கு சரியான ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகின்றது.

இது மேற்கொண்டு வரவிருக்கும் நாட்களில் குறையுமா? சர்வதேச சந்தையின் நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன?

தொடர்ந்து பணவீக்கம் என்பது குறைந்து வரும் சூழலில், வட்டி அதிகரிப்பானது மெதுவாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றாலும், தொடர்ந்து பொருளாதாரம் குறித்த அச்சமும் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

சீனாவுக்கு ஜாக்பாட்.. ஆப்பிள் கொடுத்த நெருக்கடி.. தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கிளீயர் ஆகுமா..?சீனாவுக்கு ஜாக்பாட்.. ஆப்பிள் கொடுத்த நெருக்கடி.. தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கிளீயர் ஆகுமா..?

புராபிட் புக்கிங் செய்யும் முதலீட்டாளர்கள்

புராபிட் புக்கிங் செய்யும் முதலீட்டாளர்கள்

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது 8 மாத உச்சத்தில் காணப்படுகின்றது. இது 1925 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. தொடர்ந்து பணவீக்கமானது குறையத் தொடங்கியுள்ள நிலையில் டாலரின் மதிப்பானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது தற்போது 101.5 என்ற நிலையில் இருந்து 102.3 என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது. இது தங்கத்தில் புராபிட் செய்ய முதலீட்டாளர்களை தூண்டியுள்ளது. இதற்கிடையில் தான் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

எப்படியிருப்பினும் ஒட்டுமொர்த்த போக்கு என்பது அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது வார அடிப்படையில் 1880 டாலர்கள் என்ற லெவலில் முடிவடைந்தால், இந்திய சந்தையில் 56,000 ரூபாய் என்ற சப்போர்ட் லெவலையும், 56, 600 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவலையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவனிக்க வேண்டியது என்ன?

கவனிக்க வேண்டியது என்ன?

கடந்த அமர்வில் கச்சா எண்ணெய் விலையானது சரிவினைக் கண்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலையும் சரிவில் காணப்பட்டது. இதற்கிடையில் வரவிருக்கும் முக்கிய தரவுகள், கச்சா எண்ணெய் விலை, ரெசசன் அச்சம் என பலவும் தங்கம் விலையை ஊக்குவிக்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 4.15 டாலர்கள் அதிகரித்து, 1911.20 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் இது நீண்டகால அதிகரிக்கலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்து காணப்பட்டாலும், வெள்ளி விலை அவுன்ஸூக்கு காலையில் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது சற்று குறைந்து, 23.470 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 16 ரூபாய் அதிகரித்து, 56,302 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. குறைந்து பின்னர் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 375 ரூபாய் குறைந்து, 67,852 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 5290 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, 42,320 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது வரவிருக்கும் நாட்களில் மேற்கொண்டு குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரணம் தங்கம் விலை

ஆபரணம் தங்கம் விலை

ஆபரண தங்கம் விலையானது இன்று கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 5290 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து, 42,320 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது வரவிருக்கும் நாட்களில் மேற்கொண்டு குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 5771 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 57,710 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது. இது கிராமுக்கு 1.30 ரூபாய் குறைந்து, 73.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1300 ரூபாய் குறைந்து, 73,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices expected to remain volatile: at the same time gold jewellery prices fall 3rd day'

gold jewellery prices fall in third day, but still in Rs.42,000 above per 8 gram, silver prices also fall today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X