டெல்லி: தங்கம் விலையானது இன்று எட்டு மாத உச்சத்தில் காணப்படுகின்றது. அமெரிக்க டாலரின் மதிப்பு என்பது வலுவிழந்து காணப்படும் நிலையில், தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட்டது.
இதற்கிடையில் அமெரிக்காவின் வேலை குறித்தான தரவு, சேவை துறை சார்ந்த தரவு என பலவும் வட்டியில்லா முதலீடான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்தது எனலாம்.
முதலீட்டாளர்களின் கவனம்
சந்தை முதலீட்டாளர்கள் ஜெரோம் பவலின் பேச்சு மற்றும் அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறித்தான தரவினை முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். ஆக வரவிருக்கும் நாட்களில் இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தற்போது சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இது மேற்கொண்டு தேவையினை ஊக்கப்படுத்தலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
புதிய உச்சம் எட்டலாம்
இது நடப்பு ஆண்டில் புதிய வரலாற்று உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையுயர்ந்த ஆபரணங்களின் விலையானது நடப்பு ஆண்டில் டாலருக்கு எதிராக 2.36% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 65 நாட்களுக்கு மேலாக பார்க்கும்போது தங்கம் விலையானது 14.55% ஏற்றத்தில் காணப்பட்டது. இதே வெள்ளி விலையானது 22.31% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த நவம்பர் 3, 2022-க்கு பிறகு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.
தேவை அதிகரிப்பு
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது ஏற்கனவே மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. இது இனியும் அதிகரிக்கலாம். இதன் காரணமாக தங்கம் விலை இன்னும் அதிகரிக்கலாம். தொடர்ந்து கடந்த 7 நாட்களாகவே தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. வெள்ளி விலையும் அதிகரித்து வருகின்றது.
தங்கத்தினை வாங்கி வைக்கலாம்
தங்கம் விலையானது நடப்பு ஆண்டில் நல்ல ஏற்றம் காணலாம். தொடர்ந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள் மத்தியில், தங்கத்தின் முதலீட்டு தேவையானது அதிகரித்துள்ளது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். நடப்பு ஆண்டில் மத்திய வங்கிகள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம். இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம்.
முக்கிய 6 காரணிகள்
குறிப்பாக சீனா, இந்தியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம். இந்த போக்கு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டுள்ளது.
இதற்கிடையில் இன்னும் ஆறு காரணிகள் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, டாலர் மதிப்பு, சீனா தாய்வான் பிரச்சனை என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இந்தியாவில் ஆபரண தங்கம்
இந்தியாவினை பொறுத்தவரையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம். இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். பங்கு சந்தையிலும் ஏற்ற இறக்கம் நிலவி வரும் நிலையில், இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். மொத்தத்தில் நடப்பு ஆண்டில் தங்கம் விலையானது உச்சம் தொடலாம் என்பது மட்டும் தெளிவாகிறது. இது தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை என்ன? இன்று நகை வாங்க சரியான நேரமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?



Click it and Unblock the Notifications