மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவினை பொறுத்த வரையில் நமது பாரம்பரியத்துடன் ஒன்றியுள்ள தங்கமானது, மக்களின் வாழ்வுடன் பின்னி பிணைந்துள்ளது.

 

இப்படி பட்ட தங்கம் விலையானது இந்திய கமாடிட்டி சந்தையில் நேற்று பலத்த சரிவினைக் கண்டது. இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது.

சரி இன்றைய சர்வதேச தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை என்ன? ஆபரணத் தங்கம் நிலவரம் என்ன? என்ன காரணம் வாருங்கள் பார்க்கலாம்.

இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் நிலவரம்

இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் நிலவரம்

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொற்றுத்த வரையில் தங்கம் விலையானது, கடந்த இரண்டு தினங்களாகவே சரிவினைக் கண்டு வருகிறது. இதற்கிடையில் இன்று மூன்றாவது நாளாக இன்றும் சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 69 ரூபாய் குறைந்து, 50,426 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த புதன்கிழமையன்று 50,495 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 50,446 ரூபாயாக தொடங்கியுள்ளது. ஆக இன்றும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி நிலவரம்

இந்திய எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி நிலவரம்

தங்கம் விலையானது குறைந்திருந்தாலும் வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 106 ரூபாய் அதிகரித்து, 60,244 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த இரண்டு தினங்களாக சரிவினைக் கண்டு வந்த வெள்ளியின் விலையானது, இன்று நேற்றைய முடிவு விலையினை விட சற்று குறைவில் தான் தொடங்கியுள்ளது. ஆக இன்று சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

சர்வதேச தங்கம் விலை நிலவரம்
 

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நேற்று பலத்த சரிவினைக் கண்டிருந்த தங்கம் விலையானது, இன்று பெரியளவில் மாற்றமில்லாமல் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் தங்கம் விலையானது 3.65 டாலர்கள் அதிகரித்து, 1.882.85 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவு விலையானது 1879.20 டாலர்களாக இருந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1879.85 டாலர்களாக தொடங்கியுள்ளது. நிபுணர்கள் கூறியதை போல அமெரிக்கா தேர்தல் முடியும் தங்கம் விலையானது அதிக ஏற்ற இறக்கங்களைத் தான் கண்டு வருகின்றது.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் வெள்ளி விலையானது, 0.65% ஏற்றம் கண்டு, 23.510 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. நேற்று பலத்த சரிவினைக் கண்டு வந்த வெள்ளி விலையானது, இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது., நேற்றைய முடிவு விலையானது 23.359 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில், 23.483 டாலர்களாக தொடங்கியுள்ளது. தங்கம் விலையானது சற்று குறையும் விதமாக காணப்பட்டாலும், வெள்ளி விலை ஏற்றம் காணுவதை போலவே காணப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாக சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவினை காணும் விதமாகமே காணப்படுகிறது. தங்கம் விலையானது சரிவினைக் கண்டாலும், 50,250 - 50,000 ரூபாய் வரை மட்டும் செல்ல வாய்ப்புள்ளது. இதே முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 51,000 என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில் நிபுணர்கள் கூறுவது போல தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.

டாலரின் வலிமை

டாலரின் வலிமை

அமெரிக்க டாலரின் மதிப்பு நேற்று சற்று வலுவாக காணப்பட்டது. அமெரிக்க பொருட்கள் இருப்பு தரவுகளும் வெளியானது. இது டாலருக்கு சாதகமாக காணப்பட்ட நிலையில், தங்கம் விலையானது நேற்று பலத்த சரிவினைக் கண்டது. எனினும் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலையானது, தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு செய்யலாம்

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு செய்யலாம்

சர்வதேச பங்கு சந்தைகள் பலவும் நேற்று பலத்த சரிவினைக் கண்டன. இதனால் உலகளாவிய முதலீட்டாளர்கள் ஆபத்தான சொத்துகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தினை மேற்கொண்டு வாங்கலாம். மேலும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலும், தங்கத்திற்கு ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்கள்

தங்கத்தின் சப்போர்ட் விலையானது 50,250 - 50,000 ரூபாயாகும்
இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 50,780 - 51,000 ரூபாயாகும்.

வெள்ளியின் சப்போர்ட் விலையானது 59,500 - 59,000 ரூபாயாகும்
இதே ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 60,800 - 61,500 ரூபாயாகும்.

தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் என்றாலும், 50,000 ரூபாயினை தொட்டு விட்டு மீண்டும் ஏற்றம் காணலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் இன்றைய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கம் இன்றைய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

Intraday levels

பைவோட் பாயிண்ட் - 50,596

சப்போர்ட் லெவல்கள் - 50,128, 49,761, 48,926

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 50,963, 51,431, 52,266

 

Weekly levels

பைவோட் பாயிண்ட் - 50,910

சப்போர்ட் லெவல்கள் - 50,366, 49,893, 48,876

ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 51,383, 51,927, 52,944

வெள்ளி இன்றைய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளி இன்றைய சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

Intraday levels
பைவோட் பாயிண்ட் - 60,579
சப்போர்ட் லெவல்கள் - 58,658, 57,179, 53,779
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 62,058, 63,979, 64,263

Weekly levels
பைவோட் பாயிண்ட் - 62,565
சப்போர்ட் லெவல்கள் - 61,060, 59,672, 56,779
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 63,953, 64,458, 68,351

எந்த காரணிகளும் மாறவில்லை

எந்த காரணிகளும் மாறவில்லை

தங்கம் விலையானது குறைந்தாலும், பையிங் டிரெண்ட் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமில்லை. நிச்சயம் அது ஏற்றம் காணும். தங்கத்திற்கு எதிரான எந்த காரணிகளும் மாறவில்லை. அப்படியே தான் உள்ளது. தங்கத்தினை விலையில் எதிரொலிக்கும் முக்கிய காரணிகள் அனைத்துமே தங்கத்திற்கு எதிராகத் தான் உள்ளன என்று நிபுணர்கள் கூறியதும் கவனிக்கதக்க விஷயம். பொதுவாக தங்கம் பொருளாதாரத்திற்கு எதிராக ஒரு ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுவதால், அதன் முதலீட்டு தேவைகள் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கும்

நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கும்

இதற்கிடையில் பரவி வரும் கொரோனா, கொரோனா தடுப்பூசி பற்றிய நிச்சயமற்ற சூழல், அமெரிக்கா - சீன பதற்றம், பொருளாதார வீழ்ச்சி, வட்டி விகிதம், முதலீட்டு தேவை, பிசிகல் தங்கத்தின் தேவை, தங்கம் உற்பத்தி, தேர்தல், தேர்தர் கணிப்பு, அமெரிக்கா ஊக்கத் தொகை என அனைத்தும், தங்கத்திற்கு எதிராகவே அமைந்துள்ளன. இதனால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

நீண்டகால நோக்கில் எனும் போது தங்கம் மற்றும் வெள்ளியினை வாங்கி வைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் வாரத்தின் இறுதி நாளான இன்று சற்று ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படும். எனினும் குறைந்த விலையிலான இந்த நிலையில், தங்கத்தினை வாங்கவே முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் முக்கிய காரணிகள் அனைத்தும் தங்கம் விலை ஏற்றம் காணவே சாதகமாக அமைந்துள்ளன.

தங்கம் இவ்வளவு அதிகரிக்குமா?

தங்கம் இவ்வளவு அதிகரிக்குமா?

அமெரிக்காவின் முதலீட்டு குருவான ஜிம் ரோஜெர்ஸ், தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீண்டும் அதிகரிக்கும். ஏனெனில் மக்கள் அவற்றை வாங்கி வைத்துக் கொண்டே தான் இருப்பர். இதன் விளைவாக மீண்டும் அவைகள் விரைவில் புதிய உச்சத்தினை தொடும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 3000 டாலர்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கின்றது.
இதே சிட்டி குரூப் மற்றும் நியூயார்க்கினை தளமாகக் கொண்ட சொத்து மேலாண்மை நிறுவனமான எலக்ட்ரம் குழுமத்தின் நிறுவனர் தாமஸ் கபிலன் தங்கம் விலையானது 5,000 டாலரினை தொடலாம் என்று நம்புவதாகவும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

நேற்று சர்வதேச சந்தையில் விலை பெரும் சரிவினைக் கண்டிருந்த நிலையில் கூட, ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் சற்று அதிகரித்தே காணப்பட்டது, இந்த நிலையில் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 4,738 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, 37,904 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது, கடந்த ஆறு நாட்களாகவே ஏற்றம் கண்டு வந்த ஆபரணத் தங்கம், இன்று குறைந்துள்ளது கவனிக்கதக்கது.

தூய தங்கம் விலை எப்படி?

தூய தங்கம் விலை எப்படி?

சென்னையில் இன்று தூய தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பகிறது. இன்று கிராமுக்கு 37 ரூபாய் குறைந்து, 5,169 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 41,352 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஆபரணத் தங்கத்தினை போலவே, தூய தங்கம் விலையானது கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது கவனிக்கதக்கது.

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளி

ஆபரண தங்கம் விலை குறைந்திருந்தாலும் வெள்ளியிபன் விலையானது இன்று பட்டையை கிளப்பிக் கொண்டு ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக கிராமுக்கு 2.30 ரூபாய் ஏற்றம் கண்டு, 64.70 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 2,300 ரூபாய் ஏற்றம் கண்டு, 64,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall 3rd day in a row

Gold prices falls 3rd day in row in mcx today, but at this same time silver prices trade up
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X