ஐந்தாவது நாளாக சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்?

வாவ் ஐந்தாவது நாளாக தங்கம் விலையானது மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளதே. இன்னும் சரியுமா? எவ்வளவு குறையுமா? என்பதை பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம்.

உண்மையில் இது தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல விஷயமே. ஏனெனில் தங்கத்தினை வாங்கி வைக்க இது ஒரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஒட்டுமொத்த டிரெண்டும் விலை ஏறலாம் என்று கருதப்படும் நிலையில், இன்று தங்கம் விலையானது குறையலாம் ஐந்தாவது நாளாக சர்வதேச சந்தையில் சரிய தொடங்கியுள்ளது.

தங்கத்தினை வாங்கி வைக்கலாம்

தங்கத்தினை வாங்கி வைக்கலாம்

தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும் இந்த இடத்தில் வாங்கி வைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஏனெனில் டாலரின் மதிப்பானது மீண்டும் சற்று வலுவிலக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் சரியலாம். இதனால் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் பக்கம் திரும்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்

நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகும் கொரோனா தாக்கம் காரணமாக தங்கத்திற்கான முதலீட்டு தேவையும் கூடிக் கொண்டே போகிறது. ஏனெனில் இதனால் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற பயமும் நிலவி வருகிறது. இதன் காரணமாகத் தான் அமெரிக்க டாலரின் மதிப்பும் 0.2% சரிவுடன் காணப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும்

பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும்

கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி இருக்கும் அமெரிக்கா பொருளாதாரத்தின் வளர்ச்சி மிக மெதுவாகத் தான் இருக்கும். அமெரிக்கர்கள் அடுத்த பல மாதங்களாவது வைரஸூடன் வாழ்க்கையை நிர்வகிக்க வேண்டியிருக்கும் என ஃபெடரல் வங்கியின் மூன்று அதிகாரிகள் கடந்த புதன்கிழமையன்று தெரிவித்தனர்.

பணவீக்க விகிதம் அதிகரிப்பு

பணவீக்க விகிதம் அதிகரிப்பு

அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடானது எதிர்பார்த்ததை விட பணவீக்க விகிதமானது, ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது. இது 29 ½ ஆண்டுகளில் அடிப்படை பணவீக்கமானது அதிகபட்சமாக அதிகரித்துள்ளது. தங்கமானது பணவீக்கத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பு கருவியாகவும், நாணயக் குறைப்பு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் ஐந்தாவது நாளாக தங்கம் விலையானது குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 15.15 டாலர் குறைந்து, 1933.90 ஆக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தற்போது தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் விலையானது அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

வெள்ளியின் விலையானது சர்வதேச சந்தையில் சற்று குறைந்தே காணப்படுகிறது. இது தற்போது 0.164 டாலர்கள் குறைந்து, 25.797 டாலராக வர்த்தகமாகி வருகிறது. புதன் கிழமையன்று காலை நேர வர்த்தகத்தில்,வெள்ளி விலையானது அதிகரித்தாலும், பிறகு இறங்கிய வேகத்திலேயே ஏற்றம் கண்டது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்திருந்திருக்கும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது வர்த்தக தொடக்கத்திலேயே 10 கிராம் தங்கத்தின் விலையானது 250 ரூபாய் குறைந்து, 52,001 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.50% சரிவாகும்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது தற்போது, இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளி விலையானது சற்றுக் குறைந்தே காணப்படுகிறது.

இது தற்போது கிலோவுக்கு 212 ரூபாய் குறைந்து 66,540 ரூபாயாக குறைந்து காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+