நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இது ஒரு புறம் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், கடந்த ஆண்டினை போலவே தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.
இது பழைய படி, கடந்த ஆண்டு தொட்ட வரலாற்று உச்சத்தினை தொட்டு விடுமோ என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இதற்கிடையில் இதனை நிரூபிக்கும் விதமாக, நடப்பு மாத தொடக்கத்தில் தங்கம் விலையானது 44,000 ரூபாய் என்ற லெவலை தொட்டது.
எனினும் இதனையே சப்போர்ட் லெவலாக எடுத்துக் கொண்டு, மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது இப்படி ஏற்றம் கண்டு விடுமோ? நல்ல வாய்ப்பினை மிஸ் செய்து விட்டோமோ? இனி மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்வி எழுந்தது.
ஏற்றத்தில் தான் தங்கம் விலை
இதற்கிடையில் கடைசி இரு அமர்வுகளில் தங்கம் விலையானது 1000 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. எனினும் 44000 ரூபாய் என்ற லெவலில் இருந்து பார்க்கும்போது இப்போது வரையில், நடப்பு மாதத்தில் தங்கம் விலையானது 3,500 ரூபாய் ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. கடந்த வார தொடக்கத்தில் தங்கம் விலையானது 48,500 ரூபாயினை தொட்டது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் சப்போர்ட் லெவல்கள்
தங்கத்தின் சப்போர்ட் லெவலானது 47450 - 47150 ரூபாய் என நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த வார தொடக்கத்தில் தங்கத்தின் விலையானது, சரிந்து வரும் பத்திர லாபத்தினால், டாலரின் மதிப்பும் சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது ஏற்றம் கண்டு வந்தது. எனினும் சில சாதகமான காரணிகளுக்கு மத்தியில், வார இறுதியில் தங்கம் விலையானது சற்று சரிவினைக் கண்டது.
இதுவும் ஒரு காரனம்
அமெரிக்காவின் புதிய வீடு விற்பனை குறித்த டேட்டாவானது, கடந்த 2006-க்கு பிறகு, தற்போது தான் அதிகரித்துள்ளது. அதோடு உற்பத்தி குறித்த டேட்டாவும் வரலாற்று உச்சத்தினை தொட்டுள்ளது. இது தங்கத்தின் விலையில் சரிவினைக் காண காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் வரலாற்று உச்சத்தினை தொட்ட பிறகு, தங்கம் விலையானது மீண்டும் சரியத் தொடங்கியது. இது பொருளாதாரம் மீண்டு வர தொடங்கிய நிலையில், தடுப்பூசிகளும் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் சரிவினைக் கண்டது.
முதலீடுகள் சரிவு
அதன் பிறகு தொடர்ச்சியாக அமெரிக்க பத்திர சந்தையானது ஏற்றம் காணத் தொடங்கிய நிலையில், டாலரின் மதிப்பும் வலுவடைய தொடங்கியது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக வட்டி விகிதமும் பூஜ்ஜியத்திற்கு அருகிலேயே உள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது சரிவினைக் கண்டு வந்தது. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தங்கத்தில் முதலீடுகளும் குறைந்தன.
வரி அதிகரிக்க திட்டம்
இதற்கிடையில் தற்போது உலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பங்கு சந்தைகளிலும் ஏற்ற, இறக்கம் அதிகரித்து வருகின்றது. அதோடு தற்போது அமெரிக்காவில் மூலதன ஆதாய வரியானது கிட்டதட்ட இரு மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க பங்கு சந்தையானது ஏற்றத்தினை கண்ட நிலையில், கடைசி இரு அமர்விலும் தங்கம் விலையானது சற்று சரிவினைக் கண்டுள்ளது.
தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும்
வரும் வாரத்தில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலரின் மதிப்பினை பொறுத்து இருக்கும். எனினும் வரும் வாரத்தில் இரண்டாம் கட்ட பரவல் மற்றும் மத்திய வங்கிகளின் நிலைப்பாடு என்பது தங்கத்திற்கு ஆதரவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் வாரத்தில் தங்கம் விலையில் ஏற்படும் அதிக சரிவினை இது தடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
இதே ஆபரணத் தங்கத்தின் விலையினை பொறுத்த வரையில், கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தேவை சற்று மிதமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்து வரும் சில வாரங்களுக்கு இதே நிலை தொடரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications