சரிவில் தங்கம் விலை.. இது இன்னும் குறையுமா.. நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக கிடுகிடு ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலையானது, இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களாகவே தொடர்ச்சியாக ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையினால், ஒருவேளை நிபுணர்கள் சொல்வதனைபோல் தங்கம் விலையானது, இந்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் 2000 டாலர்களை எட்டுமோ? என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

அதுமட்டும் அல்ல, தங்கம் வாங்க கிடைத்த சரியான வாய்ப்பினை மிஸ் செய்து விட்டோமே என்ற எண்ணமும் முதலீட்டாளர்கள் மத்தியில் எழாமல் இல்லை. அதோடு தங்கத்தின் விலை குறைய பல காரணிகள் இருந்தும், தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதே. இன்னும் எவ்வளவு ஏற்றம் காணும். நிபுணர்கள் சொல்வது போல் அந்த இலக்கினை தொடுமா? இல்லை இன்னும் சரியும் வாய்ப்புள்ளதா? என்ற குழப்பமும் இருந்து வந்தது.

இன்று எப்படியுள்ளது?

இன்று எப்படியுள்ளது?

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கம் விலை நிலவரம் என்ன? இனி விலை குறையவே குறையாதா? இல்லை இன்னும் அதிகரிக்குமா? இன்று வாங்கலாமா? வேண்டாமா? தங்கத்திற்கு சாதகமான காரணிகள் என்னென்ன? பாதகமான காரணிகள் என்னென்ன? தற்போது நீண்டகால நோக்கில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம்? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர். வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் கடந்த மூன்று தினங்களாகவே கிடு கிடு ஏற்றத்தினை கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 4.35 டாலர்கள் குறைந்து, 1886.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 1890.40 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று 1889.15 டாலர்களாக தொடங்கியுள்ளது. இது தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே அமைந்துள்ளது.

இன்று காமெக்ஸ் வெள்ளி விலை
 

இன்று காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தினை போலவே வெள்ளியின் விலையும் இன்று சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்படுகிறது. கடந்த அமர்வில் வெள்ளியின் விலையானது 26.181 டாலர்களாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 26.105 டாலர்களாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது 0.53% குறைந்து, 26.047 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, இன்று சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 130 ரூபாய் குறைந்து, 50,260 ரூபாயாக காணப்படுகிறது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது 50,390 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 50,319 ரூபாயாக தொடங்கியுள்ளது. இதனால் தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் மூன்றாவது அமர்வுகளுக்கு பிறகு இன்று சற்று சரிவினைக் கண்டு வருகின்றது. தற்போது கிலோவுக்கு 481 ரூபாய் குறைந்து, 67,786 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளியின் விலையும் கடந்த அமர்வில் 68,267 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 67,961 ரூபாயாக தொடங்கியுள்ளது.

புராபிட் புக்கிங் செய்யலாம்?

புராபிட் புக்கிங் செய்யலாம்?

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது கிடு கிடு ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், கடைசி வர்த்தக நாளான இன்று, புராபிட் புக்கிங் காரணமாக பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. சமீபத்திய அமெரிக்கா ஊக்கத்தொகை பற்றிய பேச்சுவார்த்தைகள், பலவீனமான டாலர் ஆகியவை தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமைந்தன. இந்த நிலையில் இன்று புராபிட் டேக்கிங் காரணமாக விலை குறைந்து வருகின்றது.

தங்கத்தின் ஆதரவு விலை

தங்கத்தின் ஆதரவு விலை

தங்கம் விலை சரிய ஆரம்பித்துள்ள இந்த நிலையில், அதற்கு அடுத்த ஆதரவாக 49,620 ரூபாய் உள்ளது. அதோடு சப்போர்ட் லெவலை உடைக்கும்பட்சத்தில் தங்கம் விலையில் ஒரு திருத்தம் இருக்ககூடும். தற்போது தங்கத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் அமெரிக்கா ஊக்கத்தொகை பற்றிய பேச்சுவார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கிடையில் செனட் தலைவர் மிட் மெக்கானெல் இரு கட்சிகளும் ஒரு ஒப்பந்தத்தினை எட்டியுள்ளதாக தெரிகிறது. ஆக இது பற்றி அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு

சமீபத்திய சரிவுகளில் இருந்து தங்கம் விலையானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது ஊக்கத் தொகை எதிர்பார்ப்புகளினால் ஏற்றம் கண்டது. அதோடு அதிகரித்து வரும் கொரோனா தாக்கமும் தங்கத்திற்கு ஆதரவாக உள்ளது. இதனால் தங்கம் விலையானது அதிக அளவில் சரிவதனை இது தடுக்கிறது. மேற்கண்ட எதிர்பார்ப்புகளினால் முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை குறைத்துள்ளனர்.

 லாக்டவுன் கடுமையாக்கப்படுமா?

லாக்டவுன் கடுமையாக்கப்படுமா?

அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக லாக்டவுன் கடுமையாக்கப்படுமா? அல்லது இதில் தளர்வுகள் அளிக்கப்படுமா? என்ற நிலை இருந்து வருகிறது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு ஆதரவாகவே உள்ளது. மாடெர்னாவின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்காவும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் அமெரிக்காவில் தடுப்பூசி செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இத்தகைய சூழலினால் அடுத்து லாக்டவுன் தளர்வுகள் எப்படி இருக்கும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தடுப்பூசி பற்றிய எதிர்பார்ப்பு

தடுப்பூசி பற்றிய எதிர்பார்ப்பு

பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய நாடுகள் கூட, அவசரகால பயன்பாட்டிற்காக, கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற நாடுகளும் அனுமதிக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளன. இதன் காரணமாக உலகின் மற்ற நாடுகள் பலவற்றிலும் தடுப்பு மருந்து விரைவில் அமலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தங்கம் விலை எப்படி இருக்கும்?

இன்று தங்கம் விலை எப்படி இருக்கும்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது புராபிட் புக்கிங் காரணமாக தங்கம் விலை சரியலாம். ஆக தங்கம் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக தங்கத்தினை நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறினாலும், மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் 10 கிராம் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் 50,000 ரூபாயினை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall after 3 day gain

Gold price updates.. Gold prices fall after 3 day gain
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X