தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்..!

இன்று உலகமே மிகவும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம், அமெரிக்க தேர்தல் நிலவரம் தான். ஏனெனில் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்று தான்? பிடனுக்கு ஆதரவாக முடிவுகள் வந்து கொண்டு இருந்தாலும், அதனை ஏற்க மறுத்து வரும் டொனால்டு டிரம்ப் கடைசி நேரத்தில் என்ன செய்வாரோ என்ற குழப்பமே இருந்து வருகின்றது.

ஆக மொத்தத்தில் குழப்பமும், எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? அடுத்து என்ன நடக்கும்? யார் ஜெயித்தால், ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள் வரும்? ஆனால் அது எப்படி வருமோ? பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் வகையில் இருக்குமா என்ற பயமும் முதலீட்டாளார்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

 இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

இன்று என்னென்ன பார்க்க போகிறோம்?

சரி வாருங்கள் இன்றைய தங்கம் விலை எப்படி உள்ளது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய கமாடிட்டி சந்தையில் எப்படி உள்ளது? தற்போது வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். காரணங்கள் என்னென்ன என்று விரிவாக பார்க்கலாம். அதிலும் நேற்று 10 கிராம் தங்கம் விலையானது 1,250 ரூபாய் ஏற்றம் கண்ட நிலையில், இன்று எப்படி உள்ளது என பார்க்கலாம்.

Comex தங்கம் நிலவரம்

Comex தங்கம் நிலவரம்

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், நேற்றைய குறைந்த விலையில் இருந்து ஒப்பிடும்போது 52 டாலர்களுக்கு மேல் அதிகரித்துள்ள நிலையில், இன்று இது வரையில் அவுன்ஸுக்கு 8.75 டாலர்கள் குறைந்து, 1938.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது பலமான ஏற்றத்திற்கு பிறகு சற்று சரிவினைக் கண்டு வருகிறது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Comex வெள்ளி நிலவரம்

Comex வெள்ளி நிலவரம்

தங்கம் விலையானது சரிவில் காணப்பட்டாலும், மற்றொரு விலைமதிப்பற்ற உலோகமான வெள்ளியின் விலை ஏற்றத்திலேயே காணப்படுகிறது. நாம் இது குறித்து பல முறை படித்திருக்கிறோம். தங்கமும் வெள்ளியும் விலைமதிப்பற்ற உலோகம் என்றாலும், இவற்றின் பாதை வேறு வேறு என்று. ஏனெனில் தங்கம் ஆபரணம், முதலீட்டு தேவை, பாதுகாப்பு புகலிடமாக விளங்குகிறது. ஆனால் வெள்ளியோ தொழில் சாலைகளில் பயன்படும் உலோகமாகும். ஆக தொழில் துறை வளர்ச்சி அடைய அடைய, வெள்ளியின் தேவை கூடிக் கொண்டே போகும். இதனால் வெள்ளி விலை அதிகரிக்கத் தான் வாய்ப்புகள் உள்ளது.

Comex வெள்ளி விலை நிலவரம்

Comex வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையானது குறைந்திருந்தாலும், தொழில் துறை தேவையின் காரணமாக வெள்ளியின் விலை குறையவில்லை. தற்போது 0.44% அதிகரித்து, 25.302 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய முடிவு விலையானது 25.191 டாலர்களாக முடிவுற்ற நிலையில், இன்று தொடக்கத்தில் 25.260 ஆக தொடங்கியுள்ளது. ஆக இதுவும் வெள்ளி விலை ஏற்றம் காணுவதற்கான சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

சர்வதேச தங்கத்தின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சரிவிலேயே காணப்படுகிறது. இது தற்போது 10 கிராமுக்கு 249 ரூபாய் குறைந்து, 51,806 ரூபாயாக காணப்படுகிறது. தங்கத்தின் நேற்றைய முடிவு விலையானது 52,055 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று 51,912 ரூபாயாக தொடங்கியுள்ளது. ஆக இதனால் தங்கம் விலை சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, நேற்று 10 கிராம் தங்கம் விலையானது 1,250 ஏற்றம் கண்டு இருந்த நிலையில், இன்று புராபிட் காரணமாக சரிந்து கொண்டு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளியின் விலை சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோ வெள்ளியின் விலையானது 168 ரூபாய் அதிகரித்து, 64,425 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. நேற்றைய முடிவு விலையானது 64,253 ரூபாயாக முடிவுற்ற நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 64,479 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

என்ன தான் காரணம்?

என்ன தான் காரணம்?

தங்கம் விலையானது நேற்று எதிர்பாராத விதமாக நல்ல ஏற்றத்தினை கண்டது. இது அமெரிக்கா தேர்தல் எதிர்பார்ப்பு, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம், இது பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்திற்கு நல்ல ஊக்கத்தினை அளித்துள்ளது. இதனால் நேற்று 10 கிராம் தங்கம் விலையானது 1,257 ரூபாய் ஏற்றமும், இதே வெள்ளி விலையானது 2,700 ரூபாயும் ஏற்றமும் கண்டுள்ளது.

தங்கம் விலை எதிர்பார்ப்பு?

தங்கம் விலை எதிர்பார்ப்பு?

தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்தினை காணலாம். இதன் குறுகிய கால ரெசிஸ்டன்ஸ் விலை 52,400 ரூபாயாகவும், குறுகிய கால சப்போர்ட் லெவல் 51,700 ரூபாயினையும் தொடலாம். இதே வெள்ளியின் விலையானது குறுகிய கால நோக்கில், ரெசிஸ்டன்ஸ் விலை 65,200 ரூபாயினை தொடலாம், இதே குறுகிய கால நோக்கில் சப்போர்ட் விலை 63,700 ருபாயினையும் தொடலாம் என்கிறது எஸ்எம்சி குளோபல் கணித்துள்ளது.

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

தங்கம் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

Intraday levels
பைவோட் பாயிண்ட் - 51,797
சப்போர்ட் லெவல்கள் - 51,418, 50,782, 49,767
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 52,433, 52,812, 53,827

Weekly levels
பைவோட் பாயிண்ட் - 50,631
சப்போர்ட் லெவல்கள் - 50,137, 49576, 48,521
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 51,192, 51,686, 52,741

 

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளி சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் லெவல்

வெள்ளி - Intraday levels
பைவோட் பாயிண்ட் - 63,511
சப்போர்ட் லெவல்கள் - 62,642, 61,031, 58,551
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 65,122, 65,991, 68,471

Weekly levels
பைவோட் பாயிண்ட் - 60,608
சப்போர்ட் லெவல்கள் - 58,637, 56,409, 52,210
ரெசிஸ்டன்ஸ் லெவல்கள் - 62,836, 64,807, 69,006

 

இன்று தங்கம் விலை என்ன செய்யலாம்?

இன்று தங்கம் விலை என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது இன்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் தங்கத்தின் விலையினை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் எதுவும் மாற்றமில்லை. ஆக நீண்டகால நோக்கில் விலை அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. இதே இண்டிராடே வர்த்தகம் செய்பவர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து, அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியான பின் முதலீடு செய்வது நல்லது. ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விலை, தேவை அதிகரிக்கும் என்பதால் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+