சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க நல்ல சான்ஸ் தான்..!

தங்கம் விலை இனி குறையவே குறையாதா? இன்னும் எவ்வளவு தான் இப்படியே அதிகரிக்கும். நிபுணர்களின் கணிப்பினை போல மீண்டும் உச்சத்தினை தொட்டு விடுமோ என்ற நினைத்தவர்களுக்கு உண்மையில் இது மிக நல்ல விஷயம்.

ஏனெனில் சர்வதேச சந்தை மற்றும் இந்திய சந்தைகளில் தங்கம் விலையானது இன்று சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிய ஆரம்பித்துள்ளது. இது உண்மையிலேயே முதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் கிடைத்த நல்ல சான்ஸ் எனலாம்.

இது குறைந்த விலையில் வாங்க வழி வகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதெல்லாம் சரி, தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் தங்கம் விலை என்ன? வெள்ளி விலை என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

சர்வதேச தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று சற்று சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 9.75 டாலர்கள் குறைந்து, 1874.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் குறையும் போது நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையினை பொறுத்தவரையில், தங்கத்தினை விட சற்று பலமாகவே சரிவினைக் கண்டு வருகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 1.14% குறைந்து, 27.587 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கிழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு வார கேண்டில் பேட்டர்னிலும் டோஜி பார்ம் ஆகியுள்ள நிலையில் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

இந்திய தங்கம் விலை

இந்திய தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் விலை குறைந்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 178 ரூபாய் குறைந்து, 48,375 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. ஜூன் 4 அன்று நடப்பு காண்டிராக்ட் எக்ஸ்பெய்ரி ஆகவிருப்பதால், இன்னும் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் அடுத்த காண்டிராக்டில் வாங்கலாம்.

இந்திய வெள்ளி விலை

இந்திய வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் இன்று சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 682 ரூபாய் குறைந்து, 71,129 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், இன்று பெரியளவில் இதுவரை மாற்றம் இல்லாவிட்டாலும், சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 4,595 ரூபாயாகவும், சவரனுக்கு 36,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று பெரியளவில் மாற்றம் காணவில்லை. இன்று கிராமுக்கு சற்று அதிகரித்து 5010 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,080 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 50,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டே வருகின்றது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு 0.20 பைசா அதிகரித்து, 76.20 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 76,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையானது கடந்த சில அமர்வுகளாக சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது.

சர்வதேச பங்கு சந்தைகள்

சர்வதேச பங்கு சந்தைகள்

சர்வதேச பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படும் நிலையில், தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகிறது. எப்படியிருப்பிருப்பும் பத்திர சந்தையும், டாலரின் மதிப்பும் அதிக வீழ்ச்சியினை தடுத்துள்ளன. அதோடு அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான கவலைகள் எழுந்துள்ளதால், முதலீட்டாளர்கள் காத்துக் கொண்டுள்ளனர் எனலாம்.

கிரிபோடோகரன்சிகள்

கிரிபோடோகரன்சிகள்

சர்வதேச காரணிகள் பலவற்றிற்கும் மத்தியில், கிரிப்டோ கரன்சி மதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைய ஆரம்பித்துள்ளது. எனினும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான டேட்டா, டாலர் மதிப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று வாங்கலாமா?

இன்று வாங்கலாமா?

மீடியம் டெர்மில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு முதலீட்டாளர்கள் பணவீக்கம் டேட்டா குறித்து காத்துக் கொண்டுள்ளனர் எனலாம். எப்படியிருப்பினும் தங்கம் விலையானது குறைந்தாலும், பெரியளவிலான சரிவு இல்லை. இது இந்திய சந்தையில் தங்களது ஆர்டர்களை ரோல் ஓவர் செய்யலாம். புராபிட் புக்கிங் செய்திருக்கலாம் இதனால் விலை குறைந்திருக்கலாம். எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான நேரமாகவே பார்க்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+