இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை.. வரலாற்று உச்சத்திற்கு பின்பு கண்ட முதல் வீழ்ச்சி..!

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் படு மோசமாக அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கம் விலையானது வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டு வருகிறது.

இது சாமனியர்களின் கனவை பகல் கனவாக்கி விடும் போல் இருக்கிறது. ஏனெனில் சாமானியர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையிலானவர்கள் வரை தங்கம் என்றாலே அவ்வளவு பிரிமியமான ஆபரணமாக பார்க்கின்றனர்.

என்னதான் வைரம், வைடூரியம் என விலைமதிப்பற்ற உலோகங்கள் இருந்தாலும், இந்த மஞ்சள் உலோகத்திற்கு அப்படி ஒரு மதிப்பு. அது இந்தியாவாக இருந்தாலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி அப்படித்தான் இருக்கிறது. ஏனெனில் இன்று உலகளவில் பல நாடுகளிலும் தங்கம் என்னும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு

உலகம் எங்கிலும் கொரோனாவின் தாக்கம் வளர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையானத்னு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏனெனில் பாதுகாப்பு புகலிடமாக கருதப்படும் தங்கம் விலையானது, அதிகரித்து வரும் கொரோனாவினால் பொருளாதாரம் மேற்கொண்டு எவ்வளவு வீழ்ச்சியடையுமோ? என்ற பதற்றமும் நிலவி வருகிறது.

தங்கத்தில் முதலீடுகள் அதிகரிப்பு

தங்கத்தில் முதலீடுகள் அதிகரிப்பு

இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வந்தன. இதன் காரணமாகத் தான் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானைது அவ்வப்போது சிறிது குறைந்தாலும், தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கு சிறந்த உதாரணமே கடந்த ஆண்டில் தங்கம் விலையானது 25 சதவீதம் ஏற்றம் கண்டு இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டில் இதுவரையில் மட்டும் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆக தங்கத்தின் விலையானது எந்தளவுக்கு அதிகரித்து வருகிறது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் கிட்டதட்ட 9 மில்லியனை தொடும் நிலையில் உள்ளது. எனினும் இது வரையில் லாக்டவுனினால் முடங்கியிருந்த பொருளாதாரமானது, தற்போது கொரோனா பாதிப்புகள் இருந்தாலும், வளர்ச்சி கருதி துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தங்கம் விலை இன்று சற்று குறைந்திருக்கலாமே தவிர, நீண்ட கால நோக்கில் அது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

தங்கத்தினை ஊக்கப்படுத்தும் காரணிகள்

தங்கத்தினை ஊக்கப்படுத்தும் காரணிகள்

இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அதிகரித்து வரும் அரசியல் பதற்றங்கள், அமெரிக்கா சீனா பிரச்சனை, இந்தியா சீனா பிரச்சனை இப்படி பல காரணங்கள் உண்டு. ஆக இப்படி நிச்சயமற்ற நிலையினால் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்து இன்னும் அதிகரிக்கும் சூழ்நிலையே காணப்படுகிறது.

தங்கம் விலை இப்படித் தான் இருக்கும்

தங்கம் விலை இப்படித் தான் இருக்கும்

ஆக கொரோனாவிற்கு சரியான தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் வரை, தங்கம் விலையானது இப்படித் தான் இருக்கும் என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆக அதுவரையில் முதலீட்டாளர்களின் கவனம் அதிகளவில் தங்கம் மீது தான் இருக்கும் என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் தங்கம் விலையானது இன்று காலையில் சற்று சரிவில் வர்த்தகமாகிய நிலையில், தற்போது 0.10 சதவீதம் குறைந்து காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸூக்கு 2.35 டாலர்கள் குறைந்து, 1764.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இன்று காலையில் அதிகபட்சமாக 1759.50 டாலர்கள வரை சென்ற தங்கத்தின் விலையானது தற்போது பெரியளவில் மாற்றமில்லாமல் உள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை போலவே இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சரிவில் தங்கம் விலையானது, தற்போது 0.07 சதவீதம் குறைந்துள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலையானது 39 ரூபாய் குறைந்து அதிகரித்து, 47,905 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. நேற்றைய உச்சமான 48,284 ரூபாயினை விட அதிகரித்தால் மட்டுமே இன்று தங்கம் விலையானது சற்று அதிகரிக்கும், இல்லையெனில் இன்று சற்று வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது 0.35% வீழ்ச்சி கண்டுள்ளது. இது தற்போது 0.062 டாலர் குறைந்து, 17,832 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இரண்டாவது நாளாக வெள்ளியின் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளியின் விலையானது தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைய ஆரம்பித்துள்ளது. இது தற்போது 190 ரூபாய் குறைந்து, 48,314 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 0.38 சதவீதம் வீழ்ச்சியாகும்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னை ஆபரண தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில் கடந்த ஜூன் 18லிருந்தே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. அதில் நேற்று மட்டும் கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 4,629 ரூபாயாகவும், சவரனுக்கு 37,032 ரூபாயாக விற்பனைப் செய்யப்பட்டுள்ளது. இன்று இன்னும் இதுவரையில் விலையில் ஏதும் மாற்றம் இல்லை.

ஆபரண வெள்ளி

ஆபரண வெள்ளி

சென்னையின் ஆபரண வெள்ளியின் விலையும் கடந்த ஜூன் 19லிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இன்றும் இன்னும் பெரியளவில் மாற்றம் காணப்படவில்லை. கிலோவுக்கு 48,800 ரூபாயாக நேற்று விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று இன்னும் விலையில் மாற்றம் காணப்படவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+