முதல் நாளே சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்..!

தங்கம் விலையானது கடந்த அமர்வில் சற்று ஏற்றம் கண்டு முடிவடைந்திருந்த நிலையில், இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது.

இது அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று வலுவடைந்து காணப்படும் நிலையில், தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது.

அதோடு பொருளாதாரம் குறித்த சாதகமான அறிவிப்புகள் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளன. இதனால் பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது. இதுவும் தங்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது.

குறையுமா? எவ்வளவு?

குறையுமா? எவ்வளவு?

அதெல்லாம் சர இனி தங்கம் விலை குறையுமா? குறையாதா? அப்படியே குறைந்தாலும் எவ்வளவு குறையும்? தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் தங்கம் விலை என்ன? வெள்ளி விலை என்ன? ஆபரண தங்கத்தின் விலை என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

Comex தங்கம் விலை நிலவரம்

Comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இன்று தங்கத்தின் மீண்டும் சற்று சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 5.80 டாலர்கள் குறைந்து, 1885.95 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்துள்ள நிலையில், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Comex வெள்ளி விலை நிலவரம்

Comex வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸூக்கு 0.94% குறைந்து, 27.635 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

MCX தங்கம் விலை

MCX தங்கம் விலை

இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைந்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 163 ரூபாய் குறைந்து, 48,820 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. எனினும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 599 ரூபாய் குறைந்து, 70,960 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், தற்போது கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 4,612 ரூபாயாகவும், சவரனுக்கு 36,896 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆபரணத் தங்கம் விலை தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக சற்று ஏற்றம் கண்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 5,030 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,240 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 50,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 0.20 பைசா குறைந்து, 76.10 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 200 ரூபாய் குறைந்து, 76,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையானது கடந்த சில அமர்வுகளாக சற்று தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

பணவீக்கம் பற்றிய கவலைகள், அமெரிக்காவின் பத்திர லாபம், அமெரிக்க டாலரின் மதிப்பு, கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளிட்ட பல காரணிகள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் சப்போர்ட் லெவல் 48,750 - 48,580 ரூபாயாகும். இதே அமெரிக்க ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,100 - 49,330 ரூபாயாகும்.

வெள்ளி விலையானது சப்போர்ட் லெவல் 70,700 - 69,600 ரூபாயாகும். இதே அமெரிக்க ரெசிஸ்டன்ஸ் லெவல் 72,350 - 73,100 ரூபாயாகும்.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக இருப்பதால், நீண்டகால நோக்கில் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+