குவியும் முதலீட்டாளர்கள்.. தட தடவென சரியும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

டெல்லி:. தங்கம் விற்பனை முடங்கியுள்ள போதிலும் தங்கம் விலையானது தொடர்ந்து அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது.

கடுமையான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், முதலீட்டாளார்கள் மத்தியில் இது பெரும் கவலையாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் காலை நேர வர்த்தகத்தில் தங்கம் விலையானது அதிகரித்த நிலையில், மதியத்திற்கு மேல் வீழ்ச்சி கண்டு முடிவடைந்துள்ளது.

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு

இதற்கு முக்கிய காரணம் கொரோனாவின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி காணும் என்ற அச்சத்தில் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களின் பார்வையும் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இந்த நிலையில், தங்கம் விலையில் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களும் குவிந்ததையடுத்து, தங்கம் விலையானது தற்போது குறைய ஆரம்பித்துள்ளது.

பொருளாதார மீட்பு நடவடிக்கை

பொருளாதார மீட்பு நடவடிக்கை

பல முக்கிய பொருளாதார தரவுகளில் இருந்தும் முக்கிய தரவுகள் பலவீனமாக வந்துள்ள நிலையில், இது இன்னும் எந்தளவுக்கு வீழ்ச்சி காணும் என்று தெரியாத நிலையே நிலவி வருகிறது. இதனால் மத்திய வங்கிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க தூண்டுகின்றன என்றும் கோட்டக் செக்யூரிட்டீஸ் ஒர் குறிப்பில் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில் தற்போது தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 38.30 டாலர்கள் குறைந்து, 1672.50 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது கிட்டதட்ட 2.25% வீழ்ச்சியாகும். நேற்று சர்வதேச சந்தையில் விலை சற்று அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையினைப் போலவே வெள்ளியின் விலையும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக இன்று இதுவரையில் 6.43% வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது 0.989 டாலர் சரிந்து 14.625 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த பல நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட பலத்த வீழ்ச்சி இதுவேயாகும்.

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது இன்று வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக 10 கிராம் தங்கத்தின் விலையானது தற்போது 401 ரூபாய் வீழ்ச்சி கண்டு 45,313 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கிட்டதட்ட 1% வீழ்ச்சியாகும். நேற்று முடிவில் சற்று ஏற்றத்தில் முடிந்திருந்தாலும், இன்று விலை சரிவில் முடிவடைந்துள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளி விலையானது, 1,137 ரூபாய் குறைந்து, 41,600 ரூபாயாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையினை பொறுத்த மட்டில் இந்திய சந்தையில் அந்தளவுக்கு சரியவில்லை என்றாலும், இதன் எதிரொலியானது நாளை சந்தை தொடக்கத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க ஆபரண விலை

தங்க ஆபரண விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 24 குறைந்து 32,320 ரூபாயாகவும் உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக சரிந்து வந்த ஆபரண தங்கத்தின் விலையானது, இன்றும் மூன்றாவது நாளாக குறைந்துள்ளது. இது பெரியளவில் சர்வதேச சந்தையினை போல் இல்லாவிட்டாலும், விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி ஆபரண விலை

வெள்ளி ஆபரண விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராக்கு 1.05 ரூபாய் குறைந்துள்ள நிலையில், கிலோவுக்கு 1050 ருபாய் குறைந்துள்ளது. வெள்ளியின் விலையானது, கடந்த இரண்டு தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது. எனினும்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+