தங்கத்தின் விலையானது நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் சரிவில் காணப்பட்டாலும், மொத்தமாக பார்க்கும்போது தொடர்ந்து ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் அவ்வப்போது சரிந்திருந்தாலும், மொத்தத்தில் பார்க்கும்போது ஏற்றத்தில் தான் காணப்பட்டது.
கடந்த வாரத்தில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு காணப்பட்டாலும், கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகிறது. இதே 10 கிராம் விலையானது 9,590 ரூபாயாக காணப்படுகிறது.
எனினும் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமில்லாமல் ஒரு rangebound ஆகவே வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது. குறிப்பாக அதிகரிக்கும்பட்சத்தில் 1760 டாலர்களையும் உடைக்கவில்லை. இதே சரியும்போது 1660 டாலர்களையும் உடைக்கவில்லை. எனினும் கடந்த வாரத்தில் 1758 டாலர்கள் வரை சென்று திரும்பியுள்ளது. இது உச்சத்தினை உடைக்கும்விதமாக காணப்படுகிறது.
இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?
கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை எவ்வளவு? ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு? இதெல்லாம் சந்தைகளிலும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன? கடந்த வாரத்தில் விலை மொத்தத்தில் குறைந்திருக்கா அல்லது ஏற்றம் கண்டு இருக்கா? தங்கத்திற்கு சாதக பாதகமான காரணிகள் என்னென்ன? இனி நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.
சர்வதேச தங்கம் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது அவ்வப்போது சற்று சரிந்தாலும், தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று 1727.90 டாலர்களாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக வியாழக்கிழமையன்று 1758 டாலர்களை தொட்டது. இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். கடந்த வாரத்தில் குறைந்தபட்ச விலையானது திங்கட்கிழமையன்று 1721.90 டாலர்களை தொட்டது. எனினும் வெள்ளிக்கிழமையன்று 1744.60 டாலர்களாக முடிவுற்றது. வரும் வாரத்திலும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் திங்கட்கிழமை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.
சர்வதேச வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் பலமான ஏற்றத்தினையே கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 25.050 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே 24.660 டாலர்களாக குறைந்தபட்ச விலையினை தொட்டது. எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 25.675 டாலர்களை தொட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று 25.315 டாலர்களாக முடிவுற்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை நிலவரம்
இந்திய சந்தையினை பொறுத்தவரையில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக, தங்கம் விலையானது ஏற்றத்தினை காணத் தொடங்கியது. கடந்த 10 கிராமுக்கு 45,349 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 45,274 ரூபாயினை தொட்டது. இதே வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 46,900 ரூபாயாக அதிகரித்தது. எனினும் வெள்ளிக்கிழமையன்று முடிவில் 46,593 ரூபாயாக முடிவுற்றது. இது தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராம் தங்கம் விலை, கடந்த வாரத்தில் 1240 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 9,500 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை நிலவரம்
இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும் திங்கட்கிழமையன்று 64,800 ரூபாயாக தொடங்கிய நிலையில், அன்றே குறைந்தபட்சமாக 64,473 ரூபாயாகவே இருந்தது. எனினும் வியாழக்கிழமையன்று அதிகபட்சமாக 67,735 ரூபாயினை தொட்டது. இதே வெள்ளிக்கிழமையன்று முடிவில் 66,983 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. இது கடந்த வாரத்தில் மட்டும் 2183 ரூபாய்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. எனினும் இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளி விலையானது 77,700 ரூபாயினை தொட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடும்போது 10,717 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகத் தான் பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த வாரத்தில், 4 நாட்கள் ஏற்றத்திலும், மூன்று நாட்கள் சரிவிலும் காணப்பட்டது. கடந்த திங்கட்கிழமையன்று, சவரனுக்கு 34,064 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இன்று கிராமுக்கு 4375 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 35,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 43,600 ரூபாயினை எட்டியது. அதனுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு 8,600 ரூபாய் குறைவாகத் தான் காணப்படுகிறது. ஆக இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
தூய தங்கத்தின் விலை
தூய தங்கத்தின் விலையும் இன்று பெரியவில் மாற்றம் காணவில்லை.. கடந்த திங்கட்கிழமையன்று 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது 42,580 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலை 47,730 ரூபாயாகும். ஆக மொத்தத்தில் நடப்பு வார தொடக்கத்தில் இருந்து 10 கிராம் தூய தங்கத்தின் விலையானது சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளியின் விலையானது இன்று கிராமுக்கு 71.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 717 ரூபாயாகவும், கிலோவுக்கு 71,700 ரூபாயாகவும் உள்ளது. நடப்பு வார தொடக்கத்தில் 69,300 ரூபாயாக இருந்த கிலோ வெள்ளியின் விலை, இன்று 71,700 ரூபாயாக உள்ளது. இந்த வாரத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,400 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
மீடியம் டெர்மில் எப்படியுள்ளது?
தற்போதைக்கு மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் திருமண முகூர்த்தம், அறுவடை உள்ளிட்ட பல காரணங்களினால் தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது இந்தியாவில் இரண்டாம் கட்ட பரவல் என்பது அதிகரித்து வரும் நிலையில், அது பாதிப்பினை ஏற்படுத்தலாமோ என்ற பயமும் நிலவி வருகின்றது.
பிரீமியம் குறைந்துள்ளது?
தங்கத்தின் பிரீமியம் விலையானது கடந்த வாரத்தில் அவுன்ஸூக்கு 4 டாலர்களாக இருந்த நிலையில், இந்த வாரத்தில் 3 டாலர்களாக குறைந்துள்ளது. இது பிசிகல் தங்கத்தின் தேவையானது அதிகரித்து வரும் நிலையில், இந்த பிரீமியம் விலையானது குறைந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி மாநிலமான மஹாராஷ்டிராவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தங்க நகை விற்பனை பாதிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. தற்போது பிற மாநிலங்களிலும் சிறுக சிறுக கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
பத்திர லாபம் அதிகரிப்பு
அமெரிக்க பத்திர சந்தையானது கடந்த வார தொடக்கத்தில் சற்று அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், வார இறுதியில் மீண்டும் ஏற்றத்தினைக் கண்டது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு மீண்டும் வலுவடைந்து காணப்பட்டது. இதற்கிடையில் தான் வார இறுதியில் சற்றே அழுத்தத்தில் காணப்பட்டது.
முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு
வரும் வாரத்தில் பரவி வரும் இரண்டாம் கட்ட தாக்கம், பொருளாதார வளர்ச்சி, டாலரின் மதிப்பு, ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகளுக்கும் மத்தியில், தங்கம் விலையானது நீண்ட கால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வரும் வாரத்தில் 1760 டாலர்களை உடைத்தால், இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஏனெனில் பலவீனமான பத்திர லாபம், இதனால் டாலரின் மதிப்பு என பலவும் தங்கத்திற்கு ஆதரவாகும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
தங்கம் வாங்கலாமா?
மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை வார கேண்டில், தினசரி கேண்டில் பேட்டர்ன் என அனைத்தும் நாளை எப்படி தொடங்குகிறது என்பதை பொறுத்தும், சந்தையின் போக்கினை பொறுத்தும் தீர்மானிக்கலாம். எனினும் பல காரணிகளும் தங்கத்திற்கு சாதகமாக உள்ள நிலையில், நீண்டகால முதலீட்டாளர்கள் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்
More From GoodReturns

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications