செம சரிவில் தங்கம் விலை... நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இன்றும் பலத்த சரிவினை கண்டு வருகிறது.

10 கிராம் தங்கம் விலையானது இன்று 8 மாத குறைந்த விலையில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சரிவினை கண்டு வரும் தங்கம் விலையானது, இன்னும் சரிவினைக் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கொரோனாவினால் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பொருளாதாரம் மீண்டு வர தொடங்கியுள்ளது. இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று என்னென்ன பார்க்கபோகிறோம்?

இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு? இந்திய எம்சிஎக்ஸ் கமாடிட்டி வர்த்தகத்தில் எவ்வளவு? தங்கத்திற்கு சாதகமான, பாதகமான காரணிகள் என்னென்ன? நீண்டகால நோக்கில் இன்னும் தங்கம் விலை எப்படி இருக்கும்? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? உள்ளிட்ட பலவற்றையும் தற்போது பார்க்கவிருக்கிறோம்.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

இதன் எதிரொலியாக அமெரிக்காவின் பத்திர சந்தையானது தற்போது மீண்டு வருகிறது. தொடர்ச்சியாக ஏற்றத்தில் காணப்படுகிறது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்தது. இது தங்கம் விலை சரிவினைக் காண வழிவகுத்துள்ளது. அதோடு சர்வதேச பங்கு சந்தைகளும் அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. இதுவும் தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது.

தங்கத்தில் குறையும் முதலீடு

தங்கத்தில் குறையும் முதலீடு

ஏனெனில் பங்கு சந்தைகள் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மீண்டும் பங்கு சந்தையில் தங்களது முதலீடுகளை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் பாதுகாப்பு புகலிடமாக இருக்கும் தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளனர். சொல்லப்போனால் தங்கத்தின் செய்த முதலீடுகளை வெளியே எடுக்கத் தொடங்கியுள்ளனர். சொல்லப்போனால் தொடர்ந்து ஏற்றம் காணும் என்று கூறி வந்த நிபுணர்கள், நிறுவனங்கள் கூட தங்கத்தின் டிரெண்ட் மாறிவிட்டதாக கூறுகின்றனர்.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

தங்கத்தின் விலையானது சரிந்து வரும் நிலையில், அதன் முக்கிய சப்போர்ட் லெவல், இந்திய சந்தையில் 45,450 ரூபாயாகவும் இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 47,380 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இதே வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் லெவல் 72,800 ரூபாயாகும். இதே சப்போர்ட் லெவல் 68,400 ரூபாய் என்றும் கணித்துள்ளனர்.

அதிகரித்து வரும் பத்திர லாபம்

அதிகரித்து வரும் பத்திர லாபம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பத்திர லாபம், தங்கத்தின் மீதுள்ள ஈர்ப்பினை முதலீட்டாளர்களிடம் குறைத்துள்ளது. இது தங்கம் விலை மேலும் சரிய காரணமாக அமைந்துள்ளது. எனினும் அதேசமயம் இது பணவீக்கத்தினை தூண்டுமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கத்தின் விலையில் அதிக சரிவினைக் தடுத்துள்ளது. எப்படி இருப்பினும் தங்கம் விலையானது செல்லிங் பிரசரில் உள்ளது.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

ஆறு நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு மீண்டும் ஏற்றப்பாதையை காண ஆரம்பித்துள்ளது. இது தங்கம் விலைக்கு எதிராக அமைந்துள்ளது. தங்கம் விலையானது டாலரில் 1760 டாலர்களை உடைக்காமல் மேலே இருந்தால், அங்கிருந்து ஏற்றம் காணலாம். 1750 டாலர்களை உடைத்துக் காட்டினால் மீண்டும் செல்லிங் பிரஷர் தான் அதிகமாகும். இதனால் விலை இன்னும் வீழ்ச்சியடையலாம்.

தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்

தங்கத்திற்கு ஆதரவாக பணவீக்கம்

தற்போது உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டு வரும் நிலையில், பொருளாதாரத்தினை ஊக்குவிக்க இன்னும் ஊக்கத்தொகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பத்திர சந்தையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

comex தங்கம் விலை நிலவரம்

comex தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் இரண்டாவது நாளாக இன்று தங்கம் விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகிறது. தற்போது அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 16 டாலர்கள் குறைந்து 1759.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

comex வெள்ளி விலை நிலவரம்

comex வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் இன்ரு பலத்த சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 2.54% குறைந்து, 26.935 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது இன்று காலை தொடக்கத்தில் இருந்தே, சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராம் தங்கம் விலையானது 221 ரூபாய் குறைந்து, 46,020 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தங்கத்தின் விலையானது நேற்றைய முடிவு விலையை விட, சற்று மேல் தொடங்கியுள்ளது. ஆனால் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளியின் விலையும், சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 960 ரூபாய் குறைந்து, 68,342 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் நேற்றைய குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இன்னும் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

இன்று தங்கத்தில் என்ன செய்யலாம்?

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் தங்கம் விலை சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு நிபுணர்கள் 1750 டாலர்களை உடைத்தால் இன்னும் குறையலாம் என்றே கணித்துள்ளனர். தற்போது தங்கம் விலையும் 1756 டாலர்களை தொட்டுள்ளதால், 1750 டாலரக்ளை உடைக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் கொஞ்சம் பொறுத்திருந்து வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold prices fall third day in a row: down 18% from peak

Gold price update.. Gold prices fall third day in a row: down 18% from peak
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X