தடுமாறும் தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நீடிக்கும் குழப்பம்.. இனியும் குறையுமா?

தங்கம் விலையானது கடந்த ஆகஸ்ட் 7 அன்று உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு 4000 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. வெள்ளியின் விலையும் தங்கத்தினை போல 5.5% வீழ்ச்சி கண்டு, 4,000 ரூபாயாக வீழ்ச்சி கண்டிருந்தது.

இதே நேரம் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது 4% வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்காவின் பத்திர சந்தையானது சற்று ஏற்றம் கண்டு வரும் நிலையில், தங்கத்தில் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் காரணமாக தங்கம் விலையானது கடந்த வாரத்தில் வீழ்ச்சி கண்டது.

தங்கம் விலையானது இந்த அளவுக்கு குறைந்து காணப்பட்டாலும், நடப்பு ஆண்டில் இதுவரை 28% ஏற்றத்தில் தான் உள்ளது.

அடுத்த டார்கெட்

அடுத்த டார்கெட்

தங்கம் விலையானது தொடர்ச்சியான வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், கிரெடிட் சூசி நிறுவனம் தங்கம் விலையானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அவுன்ஸூக்கு 2,500 டாலர் ஏற்றம் காணும் என்றும் கணித்துள்ளது. இதே பேங்க் ஆப் அமெரிக்கா அவுன்ஸுக்கு 3,000 டாலரை தொடும் என்றும் முன்னதாக கணித்துள்ளது.

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் வட்டி விகிதம்

தங்கத்திற்கு ஆதரவளிக்கும் வட்டி விகிதம்

கொரோனா தாக்கத்தின் மத்தியில் நடப்பு ஆண்டில் தங்கம் முதலீடானது சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதோடு உலகளாவிய மத்திய வங்கிகள் பணப்புழக்கத்தினை எளிதாக்கும் பொருட்டு வட்டி விகிதங்களை குறைத்து வருகின்றனர். இதன் காரணமாகவும் தங்கம் விலையினை இது ஆதரித்து வருகிறது.

விலையை நிர்ணயிக்கும் காரணி

விலையை நிர்ணயிக்கும் காரணி

அதோடு தற்போது அமெரிக்கா அரசாங்கத்தில் அடுத்த மிகப்பெரிய தூண்டுதல் தொகுப்பு, மற்றும் அமெரிக்கா சீனா பதற்றங்கள், கொரோனா தடுப்பூசி பற்றிய எதிர்பார்ப்பு என பலவும் தங்கத்தின் விலையினை ஆதரிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. எல்லாவற்றையும் விட இன்றளவில் கொரோனா வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தான் இனி தங்கம் விலையினை நிர்ணயிக்கும் காரணியாக அமையும் என்று முதலீட்டு ஆலோசனை நிறுவனமான மில்வுட் கேன் இண்டர் நேஷனலில் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிஷ் பட் கூறியுள்ளார்.

தங்கம் விலையை நிர்ணயிக்கும் பல காரணிகள்

தங்கம் விலையை நிர்ணயிக்கும் பல காரணிகள்

குறைவான தேவை மற்றும் பல காரணங்களினால் தங்கம் விலையானது குறைந்தாலும், அதனை ஊக்குவிக்க பல காரணங்கள் உள்ளது. எனினும் சர்வதேச சந்தைகளின் எதிரொலி, நடப்பு பொருளாதாரம் மற்றும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் காரணிகளை பொருத்தே பங்கு சந்தை வர்த்தகம் இருக்கும் என்பதால், தங்கம் விலையானது அதனை பொறுத்தே பெரியளவில் இருக்கும்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு காலை 9.20 மணியளவுக்கு சற்று குறைந்து இருந்தாலும், தற்போது அவுன்ஸூக்கு 4.70 டாலர்கள் அதிகரித்து 1954.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் தற்போது தங்கம் விலையானது சற்று அதிகரித்து இருந்தாலும், கடந்த வெள்ளிக்கிழமை முடிவு விலையில் (1942.75) இருந்து, இன்று 1942.60 டாலர்களாக தொடங்கியுள்ளது. இதனால் விலை சற்று குறைந்தாலும் குறைய வாய்ப்புகள் உள்ளது.

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று பலமான ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இது தற்போது 2.30% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 0.603% ஏற்றம் கண்டு, 26.703 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கம் விலையானது, 10 கிராமுக்கு 54 ரூபாய் குறைந்து, 52,275 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையில் தொடக்கத்தில் சற்று சரிவினை கண்டு இருந்த நிலையில், தற்போது ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக எம்சிஎக்ஸ் சந்தையிலும் தங்கம் விலையானது சற்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் விலையானது 52,227 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 52,151 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில், வெள்ளி விலையானது 1.73% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது 1159 ரூபாய் அதிகரித்து, 68,339 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 67,171 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 67,106 ரூபாயாக தொடங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+